16 November 2013 11:28 pm
கிரிகெட் விளையாட்டின் முடிசூடா மன்னராக திகழும் சச்சின் தெண்டுல்கர் 24 ஆண்டுகளாக விளையாடி வரலாறு படைத்தவர். உலக அளவில் புகழ் பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்தவர். மத்திய அரசு அவரது புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதினை அளித்து கவுரவித்துள்ளது. அவர் இளைஞர்களுக்கு தொடர்ந்து வழிக் காட்டியாக விளங்க வேண்டும் என பல அரசியல் கட்சித் தலைவர்களும், ரசிகர்களும், நட்சத்திரங்களும், சக வீரர்களும் தெரிவித்துள்ளனர். இந்திய அறிவியல் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் அறிவியல் துறையில் பல்வேறு சாதனைகளை படைத்தவர். அறிவியல் ஆலோசகராக பணிபுரிந்து நாட்டிற்கு சேவை செய்துவருபவர். அவருக்கும் பாரத ரத்னா விருது வழங்கியிருப்பது மகிழ்ச்சி.