1 February 2014 11:57 pm
குலசேகரப்பட்டிணத்தில் 3வது ராக்கெட் ஏவுதளம் அமைப்பது குறித்து கோரிக்கைகள் குவிந்துள்ளன. இதுகுறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறு என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் திரவ இயக்க அமைப்பு வாளகம் உள்ளது. இந்த வாளகத்தை உயர்த்தி அறிவிக்கும விழா நடந்தது. விழாவில் மத்திய அமைச்சர் கலந்து கொண்டு பேசுகையில், நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் திரவ இயகக அமைப்பு மையம் திரவ இயக்க வாளகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு தனி இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார். இயக்குனருக்கு உரிய அதிகாரிகள் அனைத்தும் இந்த வாளக இயக்குனருக்கு அளிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகால கோரிக்கை தற்போது நிறைவேற்றப் பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்தப்படியாக இந்தியா விண்வெளி துறையில் 4வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவின் 3வது ரக்கெட் ஏவுதளம் குலசேகரப்பட்டிணத்தில் அமைப்பது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். கனிமொழி எம்பி உள்ளிட்ட பலரும் இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளனர். ஏற்கனவே ஸ்ரீஹரிகோட்டாவில் இரண்டு ராக்கெட் ஏவுதளம் உள்ளது. தற்போது 3வது ஏவுதளம் அமைக்க குலசேகரப்பட்டிணம் தகுதியான இடம் என்றும், பூமத்திய ரேகைக்கு மிக அருகில் உள்ளதால் எரிபொருள் செலவு மிச்சமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மத்திய அரசி்ன் பரீசிலனையில் உள்ளது. இது தொடர்பாக விரைவில் மத்திய அரசு முடிவெடுக்கும் என நம்புகிறேன் என்றார் அவர். குலசேகரப்பட்டிணத்தில் 3வது ஏவுதளம் அமைக்கப்படும் பட்சத்தில் தமிழகத்தில் இன்ஜினியரிங் படித்த இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் தென் மாவட்டம் அதிக அளவில் முன்னேறும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.