30 April 2017 5:43 pm
கொடநாடு பங்களாவின் காவலாளி கொலை வழக்கு தொடர்பாக கேரளாவில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டின் நீலகிரியில் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. பலத்த பாதுகாப்பு நிறைந்த இந்த எஸ்டேட்டில் கடந்த 24ஆம் திகதி நடந்த கொள்ளை முயற்சியில் காவலாளி ஓம் பகதூர் என்பவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூர் காயமடைந்தார். இந்தக் கொலை தொடர்பாக தற்போது கேரளாவைச் சேர்ந்த ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அளக்கரை அருகே உள்ள சொகுசு பங்களாவில் கொள்ளையடிக்க அவர் திட்டம் தீட்டியதாக தெரியவந்துள்ளது. இதற்காக கொடநாடு எஸ்டேட் அருகே இருந்து பல நாட்கள் உளவு பார்த்ததாகவும் தெரியவந்துள்ளது. கொடநாடு எஸ்டேட்டின் ஆவணங்கள், நகைகளை கொள்ளையடிக்கும் முயற்சிகள் நடத்தப்பட்டதா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.