6 January 2016 3:21 pm
தெஹ்ரானில் சவுதி தூதரகத்தை இரானிய ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கிய சம்பவத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சில் கடுமையாக கண்டித்துள்ளது. இந்த தாக்குதலினால் சவுதி அரேபியா மற்றும் இரானுக்கு இடையிலான ராஜீயத் தகராறுகள் மேலோங்கிவருகின்றன. இது தொடர்பிலான அறிக்கை ஒன்றில் ஆழ்ந்த கவலை வெளிட்டுள்ள ஐநா பாதுகாப்பு கவுன்சில், இரானிலுள்ள ராஜீய வளாகங்களை பாதுகாக்ப்பது இரானிய அரசின் கடமை என்று வலியுறுத்தியுள்ளது. தற்போதைய போராட்டங்களைத் தோற்றுவித்திருந்த சம்பவமான, ஷியா மதகுரு ஒருவருக்கு சவுதி அரேபியா 2-1-2016 அன்று மரண தண்டனை நிறைவேற்றிய சம்பவம் பற்றி ஐநா அந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடவில்லை. சிரியா மற்றும் யேமனில் அமைதியைக் கொண்டுவர முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை இந்த தகராறு பாதிக்கும் என்ற கூற்றை ஐநாவுக்கான சவுதி தூதவர் மறுத்துள்ளார்.