சிரியா மீது பிரான்ஸ் மீண்டும் வான் தாக்குதல்கள் - தமிழ் இலெமுரியா

17 November 2015 1:50 pm

பிரான்ஸில் கடந்த வெள்ளிக்கிழமை 13-11-2015 நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, சிரியாவிலுள்ள ஐ எஸ் அமைப்பின் தலைமையகத்தை இலக்கு வைத்து புதிய வான் தாக்குதல்களை பிரான்ஸ் நடத்தியுள்ளது. இத்தாகுதல்கள் திங்கள்கிழமை இரவு நடத்தப்பட்டுள்ளன. பத்து போர் விமானங்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டன என்று பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இதையடுத்து ரக்கா நகரிலுள்ள ஐ எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டு மையம் மற்றும் பயிற்சி முகாம் ஆகியவை அழிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கப் படைகளுடன் ஒருங்கிணைந்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன எனவும் பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் அமைப்பின் மீது ஈவு இரக்கமற்ற வகையில் எதிர்த்தாக்குதல்கள் நடத்தப்படும் என பிரெஞ்ச் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை 16-11-2015 உரையாற்றும்போது அதிபர் பிரான்ஸ்வா ஒலாந் அறிவித்தார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி