13 September 2014 12:35 am
சாதி வேறுபாடின்றி பொது மயானங்களை பயன்படுத்த அனைவரும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் நீதிமன்றம் ஒன்று உள்ளூராட்சி சபைகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது. தற்போது சில மயானங்களில் சில குறித்த சாதியினர் மாத்திரமே எரிக்கவோ அடக்கம் செய்யவோ முடியும். குறிப்பிட்ட சாதியினர் அல்லது துணைச் சாதியினர் மாத்திரம் பயன்படுத்தும் வகையிலான சுமார் 50 புதிய மயானங்களுக்கு மேற்கு ராஜஸ்தானில் உள்ள அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. சாதி ரீதியிலான புறக்கணிப்பு இந்தியாவில் சட்டத்துக்கு விரோதமானதாக இருந்தாலும், பல இடங்களில் அது தொடர்கிறது.