15 March 2016 10:58 pm
செவ்வாய்க் கிரகத்தை ஆராயும் செயற்கைக் கோளுடன் ராக்கெட் ஒன்று கஜகஸ்தானின் பைகானூர் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டுள்ளது. ஐரோப்பா – ரஷ்யா கூட்டு முயற்சியில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. எக்ஸோமார்ஸ் ட்ரேஸ் கேஸ் ஆர்பிட்டர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக் கோள், செவ்வாயில் உள்ள மீத்தேன் எங்கிருந்து வருகிறது என்பதை ஆராயும். இந்த முயற்சி வெற்றியடைந்தால், பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட ஆய்வு வாகனம் ஒன்றை ரஷ்யாவும் ஐரோப்பாவும் இணைந்து செவ்வாய்க்கு அனுப்பும். இது 2018லோ, 2010லோ நடக்கலாம். இதற்கு முன்பாக செவ்வாய் கிரகத்திற்கு 19 முறை ராக்கெட்களை அனுப்ப ரஷ்யா முயற்சி செய்து, தோல்வியடைந்துள்ளது.