தமிழகத்திற்கு வெள்ளப்பாதிப்பு நிதியாக மத்திய அரசு 939 கோடி வழங்கியுள்ளது - தமிழ் இலெமுரியா

24 November 2015 10:12 am

தமிழகத்திற்கு வெள்ளப்பாதிப்பு நிதியுதவியாக ரூபாய் 939 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்கியுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க துவங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான செய்தி அறிக்கையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கணக்கிட தேவையான ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தங்களது அறிக்கையை விரைவாக மத்திய அரசிடம் வழங்குவார்கள் என்றும் அதில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் கோரிக்கையை உள்ளடக்கிய அந்த கடிதம் மற்றும் பிற ஆவணங்கள், அம்மாநில அரசின் சிறப்பு பிரதிநதி டி.கே.ஜக்கையன் தலைமையிலான குழு மூலமாக பிரதமர் அலுவலகம் வந்தடைந்தது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி