தமிழர்களின் பாரம்பரிய உடை அணிய சகாயம் ஐ.ஏ.எஸ். வேண்டுகோள்- சனவரி 6 வேட்டிதினமாக கோ-ஆப்டெக்சு அறிவிப்பு. - தமிழ் இலெமுரியா

7 January 2014 5:53 am

தமிழ்நாட்டில் இன்று திங்கட்கிழமை , ஜனவரி ஆறாம் நாள், வேட்டி தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து வழக்கமாக பேண்ட் உடுத்தும் பலர் வேட்டி அணிந்து தனது அன்றாட வேலைகளுக்குச் சென்றுள்ளனர். தமிழர்களின் பாரம்பரிய உடை வேட்டி என்றாலும் கூட இன்று அதன் பயன்பாடு வெகுவாகக் குறைந்திருக்கிறது. குறிப்பாக தமிழக இளைஞர்களில் மிகப் பெரும்பாலானோர் இரு-கால் சட்டைக்கு ( பாண்ட்) மாறிவிட்டார்கள். பலவிதங்களில் அது வசதி என்பது மட்டுமல்ல அதுவே நாகரிகத்தின் வெளிப்பாடாகவும் கருதப்படுகிறது. இரண்டு சக்கர வாகனங்களில் வேட்டி அணிந்து செல்வதில் பிரச்சினைகள் உள்ளதாலும், செல்போன்கள், பர்ஸ் போன்றவற்றை வைக்க பை இல்லாது இருப்பது போன்றவற்றாலும் வேட்டி கட்டுவது குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமல்லாது, பிற தென் மாநிலங்களிலும், வங்கத்திலும் வேட்டி வெகுவாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால் இப்போது இது அரசியல்வாதிகளின் உடையாக அது சுருங்கிப் போய்வி்ட்டது.நடிகர் கமல்ஹாசன் ஒரு முறை கேரளாவில்தான் மாணவர்கள் மிக இயல்பாக வேட்டி சட்டையில் கல்லூரிக்கு வருவார்கள், அது மதிக்கத்தக்க வழமையாயிருக்கிறது ஆனால் தமிழ்நாட்டில் அத்தகைய நிலை இல்லை என்றார். இந்நிலையை மாற்றி, இளைஞர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் தமிழக அரசு நிறுவனமான கோ ஆப் டெக்சின் நிர்வாக இயக்குநர் சகாயம் சனவரி 6 வேட்டி நாளாக அறிவிக்கப்பட்டு பெரும்பாலான தமிழர்கள் வேட்டியுடன் அலுவலகங்களுக்குச் செல்வதைக் காணமுடிந்த்த்து. அவருடைய முயற்சிகள்  வெற்றி கண்டுள்ளார்.. பரவலாக இந்நாள் ஏற்கனவே விளம்பரப்படுத்தப்பட்டிருக்கிறது. வேட்டியின் விற்பனையை அதிகரித்து நெசவாளர்களின் வாழ்க்கையை உயர்த்துவது கோ ஆப்டெக்சின் நோக்கமாக உள்ளது. ஆனால் தனியார் வேட்டி நிறுவனங்கள், தங்கள் பொருட்களுக்கான விற்பனை அதிகரித்துள்ளது என்கின்றனர். ஆலயா வேட்டி நிறுனவத்தின் இயக்குனர் நிஷாஸ் மன்சூர் மாறி வரும் விருப்பங்களுக்கு ஏற்ப தமது நிறுவனம் வேட்டிகளைத் தயாரித்து விற்பதாகவும் அதற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் தெரிவித்தார். பொதுமக்கள் அன்றாடம் வேட்டியை உடுத்தாவிட்டாலும் பல முக்கிய மத மற்றும் கலாசார நிகழ்ச்சிகளின் போது வேட்டிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்கிறார்கள் நோக்கர்கள்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி