தாலிபான் உத்தரவில் இளம் பெண் கல்லால் அடித்துக் கொலை - தமிழ் இலெமுரியா

4 November 2015 10:14 am

மத்திய ஆப்கானிஸ்தானில் திருமண உறவுக்கு அப்பாற்பட்ட பாலியல் உறவு வைத்திருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்ட இளம்பெண் ஒருவரை தாலிபான்கள் உத்தரவின்பேரில் பலர் கல்லால் அடித்துக்கொன்றிருக்கிறார்கள். ரொக்ஷனா என்ற இந்த இளம்பெண் கட்டாயமாக ஒருவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார் என்றும் பின்னர் அந்த திருமணத்திலிருந்து தப்பிக்க அவரது வயதையொத்த ஒரு ஆணுடன் ஓடிப்போக முயன்றிருக்கிறார் என்றும் செய்திகள் கூறுகின்றன. ஆனால் அந்த ஆணுக்கு சவுக்கடி தண்டனை தரப்பட்டது. தாலிபான்களின் உத்தரவில் பல ஆண்கள் அப்பெண்ணை கல்லால் அடித்துக் கொல்லும் காட்சியைக் காட்டும் கைத்தொலைபேசி வீடியோக் காட்சிகள் வெளிவந்துள்ளன. உள்ளூர் மதத்தலைவர்களும், ஆயுதந்தாங்கிய கிளர்ச்சிக்குழு தலைவர்களும், இந்தக் கொடூரத்தில் பங்கேற்றனர் என்று இந்த மாகாண ஆளுநர் சீமா ஜொயெந்தா கூறினார். இந்தக் கொடுமையைச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று அவர் அரசைக் கோரினார். மிகப் பழமைவாத அணுகுமுறைகள் பெண்களை அப்பகுதியில் அடக்கி ஒடுக்குவதாக அவர் கூறினார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி