20 October 2013 4:22 am
திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்டு பொதுவுடைமை ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவர் சமர்ஆச்சார்ஜி. இவர் காண்டிராக்டராக பணி புரிகிறார். கடந்த வியாழக்கிழமை சமர் ஆச்சார்ஜி பண மெத்தையில் படுத்து உருண்ட காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.20 இலட்சம் பணத்தை எடுத்து வந்து, தனது படுக்கையில் போட்டு படுத்தாகவும், இதன் மூலம் தனது நீண்டகால கனவு நனவானதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். அவரது இந்த செயல் கட்சிக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. கட்சியின் உயர் மட்டக் குழு இது தொடர்பாக விசாரணை செய்ய சமர் ஆச்சார்ஜியே பண மெத்தையில் படுத்து இருப்பதை செல்போனில் பதிவு செய்து தொலைக்காட்சி அலைவரிசையில் (சேனலில்)பணிபுரியும் நண்பருக்கு கொடுத்தது தெரியவந்தது. கட்சியின் பெயரை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறி சமர் ஆச்சார்ஜி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.