தேசிய அரசங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு: டக்ளஸ் தேவானந்தா. - தமிழ் இலெமுரியா

29 August 2015 1:58 pm

இலங்கையில் அமையவிருக்கும் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர், தேசிய அரசாங்கம் அமைப்பது ஒன்றிரண்டு கட்சிகளாக இருக்கமுடியாது. நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் சகல கட்சிகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமென டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். அமைச்சர் பதவியை எதிர்பார்த்து அரசுக்கு ஆதரவளிக்கவில்லையென்றும், அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் டக்ளஸ் தேவானந்தா கூறியிருக்கிறார். இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குறித்து உள்ளக விசாரணைக்கு அமெரிக்கா ஆதரவளித்திருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கும் நிலையில், எம்மாதிரியான விசாரணையாக இருந்தாலும் மக்களுக்கு நீதி கிடைப்பதே முக்கியம் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி