நெப்போலியனின் அணிந்திருந்த தொப்பி ஏலத்திற்கு வந்துள்ளது - தமிழ் இலெமுரியா

17 November 2014 12:07 pm

நெப்போலியன் பொனபாத் பயன்படுத்திய புகழ்பெற்ற தொப்பிகளில் ஒன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு அருகே உள்ள ஃபோன்தேம்பில நகரில் ஏலம் விடப்படுகின்றது. நெப்போலியன் பயன்படுத்திய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேலும் பல நினைவுப் பொருட்களும் இங்கு ஏலத்துக்கு வருகின்றன. இரண்டு பக்கங்கள் கூரான இந்தத் தொப்பி, 1800-ம் ஆண்டு மரேங்கோ போரின்போது நெப்போலியன் அணிந்திருந்தது. இப்போது மொனாக்கோ அரச குடும்பத்துக்குச் சொந்தமான பொருட்களில் இதுவும் உள்ளது. 1800 ஆம் ஆண்டு போரில் நெப்போலியன் அணிந்திருந்த தொப்பி ஐந்து லட்சம் யூரோவுக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  நெப்போலியனைக் கொல்ல விரும்பிய ஜெர்மனிய மாணவன் வைத்திருந்த கத்தி ஒன்றும், ஒருகாலத்தில் போர்க்கொடியின் உச்சத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டடிபட்ட துளையுடன் கூடிய வெண்கல கழுகு ஒன்றும் ஏலத்துக்கு வந்திருக்கின்றன

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி