2 November 2015 10:31 am
முதலாம் உலகப் போரில் பிரிட்டிஷ் படைகளில் இருந்த சீக்கிய வீரர்களின் நினைவாக பிரிட்டனில் முதன் முறையாக தேசிய நினைவிடம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மத்திய பகுதியில் உள்ள தேசிய பூங்காவொன்றில் சீக்கிய போர்வீரர் ஒருவரின் நெஞ்சு வரை அமைந்த வெண்கல சிலை ஒன்று – சீக்கிய மரபுப் படியான ஆராதனைகள் மற்றும் ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் திறந்து வைக்கப்பட்டது. அக்காலத்தில் பிரிட்டிஷ் – இந்திய ராணுவத்தில் சீக்கிய வீரர்கள் ஐந்தில் ஒரு பங்கினர் அளவில் இருந்தனர். சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் சீக்கிய வீரர்கள் முதலாம் உலகப் போரில் போரிட்டிருந்தனர். தனிப்பட்ட நிதி நன்கொடைகள் மூலம் இந்த நினைவிடம் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.