மாலி ஹோட்டலுக்குள் ஆயுததாரிகளின் பிடியில் யாரும் இல்லை - தமிழ் இலெமுரியா

21 November 2015 10:07 am

மாலியின் தலைநகர் பமாகோவில் ஹோட்டல் ஒன்றுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியிருந்த இஸ்லாமியவாத ஆயுததாரிகள் என்று சந்தேகிக்கப்படுவோரின் பிடியில் இனி யாரும் இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். ரடிஸ்ஸன் ப்ளூ ஹோட்டலுக்குள் நுழைந்த ஆயுததாரிகள்,அல்லாஹு அக்பர் என்று கோஷமிட்டபடி, உள்ளே 170 பேரை பிடித்து வைத்திருந்தனர். அதனையடுத்து, அதிரடியாக நுழைந்த சிறப்புப் படையினர் தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்த சம்பவத்தில் குறைந்தது மூன்று பேர் பலியாகியுள்ளதாகவும் இரண்டு படைவீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். அமெரிக்க உரிமையாளர்களைக் கொண்ட இந்த ஹோட்டலில் வெளிநாட்டு வணிக பிரமுகர்களும் விமானசேவைப் பணியாளர்களும் தங்குவது வழக்கம்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி