16 September 2015 10:57 am
இந்தியாவில் விவசாயத்தில் யோகாவைப் பயன்படுத்த வேண்டுமென தேசிய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்திருக்கிறார். நேர்மறை எண்ணங்களின் மூலம் விதைகளின் சக்தியைக் கூட்ட முடியுமெனவும் அவர் கூறியிருக்கிறார். இதனால் மண்ணின் சக்தியும் அதிகரிக்கும் என அவர் தெரிவித்திருக்கிறார். "ஒவ்வொரு நாளும் விவசாயிகள் அமைதி, அன்பு, தெய்வீகத்தின் அதிர்வுகளை விதைகளுக்கும் தன்னுடைய நிலத்திற்கும் தர வேண்டும். ராஜயோகத்தின் உதவியுடன் இதை அவர் செய்ய வேண்டும். இது வளர்ச்சிக்கும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்." என தில்லியில் கூட்டமொன்றில் பேசிய அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் விவசாயத் துறையையே சார்ந்திருக்கின்றனர். சமீப காலமாக விவசாயத்தில் ஏற்படும் நஷ்டத்தின் காரணமாக நாடு முழுவதும் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.