இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் செப்டம்பர் மாதம் தேர்தல் - தமிழ் இலெமுரியா

6 July 2013 7:10 pm

இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் செப்டம்பர் மாதம் தேர்தல் நடக்கிறது. இதற்கான உத்தரவில் அதிபர் மகிந்தா ராஜபக்சே நேற்று கையெழுத்திட்டார்.

மாகாண தேர்தல்

இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்த அதிபர் ராஜபக்சே ஏற்பாடுகள் செய்து வந்தார். இந்த சூழ் நிலையில், அரசியல் சட்டத்தின் 13ஏ பிரிவில் திருத்தம் கொண்டு வரப்பட்டால், அது தமிழர்களுக்கு பாதிப்பாக அமையும் என்று கருதப்படுகிறது.இதற்கிடையே, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, வடக்கு மாகாணத் தேர்தல் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. இதற்கான உத்தரவில் ராஜபக்சே கையெழுத்திட்டார். இதன்படி, தலைமை தேர்தல் கமிஷனர் மகிந்தா தேஷப்பிரியா தேர்தல் பணிகளை விரைவில் தொடங்குவார்.செப்டம்பர் 21 அல்லது 28–ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்த மாத தொடக்கத்தில் தேஷப்பிரியா தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

சட்ட திருத்தம் அவசியம்

தமிழர்கள் வசிக்கும் வடக்கு மாகாணத்தில், போலீசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில், அரசியல் சட்டம் 13ஏ–வில் திருத்தம் கொண்டுவர வேண்டியது அவசியம் என்று நேற்றும் ராஜபக்சே நியாயம் கற்பித்தார்.இதுகுறித்து ஒரு பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், ‘‘தெற்கு பகுதியில் குற்றம் செய்யும் ஒருவர் வேறு மாகாண பகுதிக்குச் சென்று ஓடி ஒளிந்து கொண்டால், போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்வது கடினம். ஆகவே இந்த சட்டத்திருத்தம் அவசியம்’’ என்று அவர் தெரிவித்தார்.அவர் தெற்கு பகுதி என்று குறிப்பிட்டாலும், தமிழர்கள் வாழும் வடக்கு பகுதியை மறைமுகமாக குறிப்பிட்டதாகவே கருதப்படுகிறது

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி