5 July 2013 12:25 pm
அப்பிள், கூகுள் என பல முன்னணி நிறுவனங்கள் கையில் அணியக்கூடிய ஸ்மார்ட் கை கடிகாரத்தை தயாரித்து வருவதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகின்றன.
எனினும் அப்பிளோ, கூகுளோ இதுவரை அவ்வாறானதொன்றை சந்தைக்கு அறிமுகப்படுத்தவில்லை. இந்நிலையில் பெரிய நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் ஸ்மார்ட் கடிகாரத்தை இந்திய மாணவர்கள் சிலர் தயாரித்துள்ளனர். குறித்த ஸ்மார்ட் கடிகாரம் ‘அண்ட்ரோய்ட்லி’ எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன் முற்றிலும் அண்ட்ரோய்ட் இயங்குதளம் மூலம் இயங்குகின்றது.
இரண்டு அங்கு திரையைக் கொண்டுள்ளதுடன் 2 மெகாபிக்ஸல் கெமராவினை கொண்டுள்ளது. புளூடூத், ஜி.பி.எஸ், 256 எம்.பி. ரெம், வை- பை, 8 மற்றும் 16 ஜிபி மெமரி என பல வசதிகளை இக்கைக்கடிகாரம் கொண்டுள்ளது.
இதன் விலை 150 பவுஸ்கள் எனத் தெரிவிக்கப்படுவதுடன், சிம் அட்டயை உபயோகிப்பதன் மூலம் இதனூடாக குறுந்தகவல் அனுப்புதல், அழைப்பினை மேற்கொள்ளுதல் போன்றவற்றையும் மேற்கொள்ள முடியும்.
இந்திய மாணவர்களின் தயாரிப்பிலேயே இது உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.