21 August 2013 8:22 am
மஞ்சள் ஒரு மருத்துவ மூலிகையாகும். காப்புரிமை கடமை"யை காட்டித் தந்த நம் பாட்டன் சொத்து மஞ்சள் எனலாம். இது 60 முதல் 90 செ.மீ உயரம் வரை வளரக்கூடிய ஒரு பூண்டு வகைச் செடியாகும். இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டிலுள்ள முளையிலிருந்து கிளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு. இது இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருளாகும். அக்காலத்தில் பெண்கள் மஞ்சள் பூசிக் குளித்தது அழகுக்காக மட்டுமல்ல; ஆரோக்கியத்திற்காகவும் தான். மஞ்சளில் குர்க்குமின் (Curcumin) எனும் வேதிப் பொருள் உள்ளது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியும், வைரஸ் எதிர்ப்புத் தன்மையும் கொண்டவை என இன்றைய விஞ்ஞானம் நிரூபித்துள்ளது. புண்ணை ஆற்றவும், அடிபட்ட புண்ணில் "டெட்டனஸ்" கிருமி தாக்காதிருக்கவும் மஞ்சளை முதலுதவியாகப் பயன்படுத்தலாம். இத்தகைய மஞ்சள் முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், ஆழப்புழை மஞ்சள் எனப் பல்வேறு வகைகளில் விளைவிக்கப் படுகின்றன."