வாசகர் பக்கம் - தமிழ் இலெமுரியா

15 October 2015 2:45 pm

சிறப்பான தூய தமிழ் கட்டுரைகள் நான் ஒரு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 7 ஆண்டுகளாக புழல், சென்னை நடுவண் சிறையில் இருந்து வருகிறேன். இந்நிலையில் எங்கள் சிறையில் உள்ள நூலகத்திற்கு மாதமாதம் தங்கள் தமிழ் இலெமுரியா இதழ் வருகிறது. அதில் வரும் சிறுகதைகள், கட்டுரைகள், கல்வியியல், கவிதைகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. தமிழ் அறிஞர்களின் தூய தமிழ் கட்டுரைகள் மிகவும் சிறப்பாக உள்ளது.மா.ராஜ்குமார்சிறை எண், 2647, நடுவண் சிறை – 1 , புழல், சென்னை – 600 066எங்கே போகிறோம்? ‘நாடற்றத் தமிழர்கள்’ தலையங்கம் உலகெங்கும் சிதறிக் கிடக்கின்ற தமிழர்களின் வாழ்நிலைகளைப் படம் பிடித்துக் காட்டியது. தமிழினத்தின் விடியல் என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் விழிப்பில்தான் உள்ளது" என்பதனை முத்தாய்ப்பாய்ச் சொல்லிய விதம் ஏக்கத்தோடு கலந்த எதிர்பாப்பாய் நம் முன் நிற்கிறது. தமிழர்கள் வாக்கும் சிங்களவர் போக்கும் என்கிற வரலாற்று ஆய்வுக் கட்டுரை தலையங்கத்துக்குச் சான்று கூறுவது போல் இலங்கையில் தமிழினம் கண்ட ஏமாற்றத்தைத் தொட்டுக் காட்டியது. அதன் எதிர்ப் பக்கத்தில் எழுச்சி கொண்டு நின்ற "தமிழர் நலம்" பேரியக்கத்தின் அறை கூவல். ஏ! தாய்த் தமிழ் நாடே, நீ எங்கு போய்க் கொண்டிருக்கிறாய்? என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்கின்ற கேள்வித் தணல்களாய் எனக்குள் கனன்றது.- கவிஞர் பூவரசு மறைமலையன்,  கோவை -& 641 030தமிழினத்தின் சரிவு நிலையே! புரட்டாசி இதழின் முகப்புக் கவிதை மரபின் மாண்பை வெளிப்படுத்தியது. மரபல்லாதவைகள் உரைத் தெளிப்புகள்; அவசரத்தில் போடுகிற கூடாரப் பந்தல் போன்றவைகள்தான்; நிலையான கட்டடங்கள் அல்ல அவை. ‘நாடற்ற தமிழர்கள்’ ஆசிரியருரை தமிழினத்தின் சரிவு நிலையையே படம் பிடித்துக் காட்டியது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று நாம்தான் சொல்கிறோம். மற்றவர்கள் அவ்வாறு சொல்லிக் கொள்வதில்லை. தமிழர் இரக்கப்பட்டு இப்போது பிறரிடம் இரக்க வேண்டிய & இறக்க வேண்டிய நிலைக்கு வந்து விட்டார்கள்.- க.அ.பிரகாசம்,  கொடுமுடி – 638 151உரைவீச்சே உங்கள் முகவரி! உலக வட்டத்தில் தமிழர் வாழுமிடமெல்லாம் ‘தமிழ் இலெமுரியா’ பரவுகிறது. குறிப்பாக, தமிழக இலக்கிய வட்டம் தங்களைக் கூர்ந்து நோக்குகிறது. ரோகிஞ்சா கொலைவரிசைப் படங்கள் அழ வைக்கின்றன. உரை வீச்சே உங்கள் முகவரி! உணர்ச்சி மிகு நடை. தங்கள் தமிழ் தொண்டினை, சமூகப் பணியினை காலம் நீடு,  நினைவில் வைக்கும். வளர்க! வெல்க! - பெ.ஆராவமுதன்,  கள்ளக்குறிச்சி – 606 202மறவாது! மிகுந்த வணக்கம். தாங்கள் தொடர்ந்து இதழ் நடத்தித் தமிழ்நாட்டில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறீர்கள். பெருஞ் சுமையைத் தங்கள் தோள்களில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த நன்றியைத் தமிழுலகம் என்றும் மறவாது! மறவாது!- கவிஞர் கோ.மோகனரங்கன்,  சென்னை – 600 088அருமையான படைப்புகள் ‘புதுக்கவிதையா? மரபுக் கவிதையா?’ கவிவேந்தரின் கவிதை, மிக அருமை. ஆனால் காலத்தின் கட்டாயம், மரபுக் கவிதை மாற்றம் பெற்று புதுக்கவிதை, வசனக் கவிதை, நாடகக் கவிதை, மெல்லிசைக் கவிதை என எத்தனையோ வகைகளில் தமிழ்க் கவிதைகள் வெளிவருகின்றன! மக்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். ‘நாடற்ற தமிழர்கள்’ தலையங்கம் வெகு சிறப்பு! ஆயினும் தமிழர்களிடம் ஒற்றுமை உணர்வு இல்லாததால் எதிலும் வெற்றி பெறுவதில்லை. தமிழர்கள் மராட்டியம், ஆந்திரம், கருநாடகம், கேரளம், சிங்களம், அந்தமான் நிக்கோபார், மொரிசியசு எனப் பல இடங்களில் பிழைப்புத் தேடியும் உழைப்பை விற்பதற்காகவும் புலம் பெயர்ந்துள்ளனர். ஆனால் அத்தனை இடங்களிலும் இரண்டாம் தரக் குடிகளாகவே வாழ்கின்றனர். இதழ் முழுதும் அருமையான படைப்புகள் உள்ளன. பாராட்டுகள்.‘வன்மச்சுவடுகள்’ சிறு கதை அருமை. ஆயினும், முடிவு, மனதை வாட்டுகிறது! சாதிக் கொடுமையால், நல்ல உள்ளம் மாண்டதே! வருத்தமாயுள்ளது! - த.சுப்பிரமணியன்,  செகந்தராபாத் – 500 061தமிழனுக்குத் தமிழனே பகை! ‘நாடற்றத் தமிழர்கள்’  தலையங்கம்   நம் தலையில்  நாமே   மண்ணைப் போட்டுக்  கொண்ட   இழிவைத்   தெளிவாகக்  காட்டியது.  முதலில்  இதற்கு வித்திட்டவர்களே  மூவேந்தர்கள்தாம்.  தமக்குள்ளே   ஒற்றுமையின்றித்   தமிழர் என்ற   இனப்பற்றுமின்றி   ஒருவர்   காலை  ஒருவர்   வெட்டியதால்தானே   வட நாட்டையே   வென்ற   தமிழனின்  தமிழ்நாட்டை   வடநாட்டான்   வென்று   ஆட்சி செய்தான்.  மறுவாழ்வு  அமைச்சகத்தைத்   தமிழ்நாடு  அரசு   ஏற்படுத்துவதற்கு  முன்பு  மனம் மாற்று  அமைச்சகத்தை  ஏற்படுத்தி  எல்லா  தலைவர்களையும்   ஒன்றிணைத்தாலே   தலையங்கத்தில்  எதிர்பார்க்கும்  நம்பிக்கை  நனவாகும்.- கருமலைத் தமிழாழன்,  ஓசூர் –  635 109உயர்ந்த எண்ணம்‘தமிழ் இலெமுரியா’ ஆடி இதழ் சிறப்பாக வடிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. "என் எண்ணமெல்லாம்…" என்னும் மேதகு அப்துல் கலாம் அவர்களின் உரையை தாங்கள் மீள்பிரசுரித்தது தக்க செயலே. அதனைப் படிக்கப் படிக்க, இப்படிப்பட்ட உயர்ந்த எண்ணம், சீரிய சிந்தனை, தணியாத நாட்டுப் பற்று, சமுதாய மறுமலர்ச்சி உணர்வு ஆகியவற்றை பெற்றுள்ள அப்துல் கலாம் நம் மண்ணில் தோன்றியவர் என்கிற எண்ணமே புல்லரிக்க வைத்தது. தங்கள் செயல் போற்றுதற்குரியது.- செ.வ.மதிவாணன்,  கள்ளக்குறிச்சி – 606 202தமிழகத்தின் விடியல்! பிற நாடுகளில் வாழும் தமிழர்களின் உரிமைகளைப் பேணும் வகையில் வெளிநாட்டு இந்தியர்களுக்காக நடுவணரசு ஏற்படுத்தியிருக்கும் ஒரு அமைச்சகம் போல புலம் பெயர்ந்து பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் நலம் காக்கும் வகையில் ஒரு தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்து, தமிழர் வாழ்வில் ஒளி வீச முயற்சி செய்து முனைப்புடன் எழுதப்பட்ட தலையங்கம் தமிழகத்தின் விடியல்!படித்த ஏழை மாணவன் ஒருவன் பெரிய நிறுவனம் ஒன்று நடத்திய நேர்முகத் தேர்வில் வென்ற விதத்தை எளிதான தன் எழுத்துநடை மூலம் எழிலாக எடுத்துச் சொல்லிய எழிலனின் ‘மண் உண்டியல்’ சிறுகதை – பொன் உண்டியல்!ஆடி இதழில் சமூக வெறியால் பாதிக்கப்பட்ட இரண்டு தலைமுறையினரின் காதலை ரத்தினச் சுருக்கமாய் சொல்லி செல்வம் கந்தசாமி கதை படைத்திருந்தாரேயானால்… ‘வன்மச் சுவடுகள்’ – சுருக்கென்று நெச்சை தைத்திருக்கும்.- ப.லெ.பரமசிவம்,  மதுரை – 625 009வளர்க நின் தமிழ்த்தொண்டு.கலை, இலக்கியத் திங்களிதழாகிய ‘தமிழ் இலெமுரியா’வில், நான் தவறாமல் படிக்கும் பகுதிகளில் ஆசிரியருரை சிறப்பிடம் பெறுகிறது. தமிழ், தமிழின முன்னேற்றம் ஆகியவற்றில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு நாட்டு நடப்பைத் துல்லியமாகக் கணித்து  எழுதும் ஆசிரியரின் ஆற்றல் போற்றுதற்குரியது. நேர்மையற்ற, மொழிப்பற்றற்ற, இனப்பற்றற்ற ஊடகங்கள் நாட்டை நாசமாக்கிவிட்டன. ஊடக வணிகர்கள் மக்களை ஏமாற்றவும் ஊழலை மூடி மறைக்கவும் நன்றாகவே கற்றுக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தன்மானத்துடன் செயலாற்றி வரும் தமிழ் இலெமுரியாவைப் பாராட்டித்தான் ஆகவேண்டும். வளர்க நின் தமிழ்த் தொண்டு வாழ்த்துக்களுடன்… - களப்பிரன்நல்லெண்ணங்கள் உரித்தாகுக!மாமேதை அப்துல் கலாம் பாரத முன்னாள் பிரதமர் நேரு ஆகிய இருபெரும் ஆளுமைகளைப் பற்றிய விரிவான செய்திகளால் நிரம்பிய ஆகஸ்ட் இதழ் சுவை கூட்டியது. 1964இல் நேருவின் மறைவுக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்ட இழப்புணர்வுக்கு இணையான அஞ்சலிகள் அப்துல் கலாமின் மறைவுக்குப் பிறகு (தமிழ்) நாட்டில் காணக்கிடைத்தது. பண்டிதர் நேரு என்பது கஷ்மீரபண்டித் இனப் பெயரின் ஒட்டாகும். இன்றைய நிலையில் தமிழ் நாட்டில் மது விலக்கு (படிப்படியாகவேனும்) வரவேற்கத்தக்கது. அத்திசையில் தமிழக அரசியல் கட்சிகள் பயணிக்க முனைவதைப் பாராட்டவேண்டுமே தவிர உள் நோக்கம் கற்பித்தல் முறையல்ல, வன்மச் சுவடுகளில் எழில் சாவைத் தேர்ந்தெடுத்தது ஏற்புடையதே அல்ல.இலெமுரியா அறக்கட்டளையின் சீர்மிகு பணிகள் சிறந்தோங்க நல்லெண்ணங்கள் உரித்தாகுக!க.த.அ.கலைவாணன்,  வேலூர் – 632 002வாழ்த்துகளும் பாராட்டுகளும்புரட்டாசி இதழில் ‘தமிழ் இலெமுரியா’ மிகவும் மெருகுக் கூடி உயர்ந்து காணப்பட்டதில் மகிழ்ச்சி. வாழ்த்துகளும் பாராட்டுகளும். எது சிறந்த உணவு? கட்டுரை போன்று இவ்வுலக வாழ்வியல் மேம்பாட்டு நலவாழ்வுப் பாதுகாப்புத் தகவல்கள், கருத்துகள் தொடர்ந்து வரட்டும். காரணம் நடிகர்களின் ஒளிப்படம் போடாத ஒரே தமிழின திராவிடப் பண்பாடு போற்றும் இதழ் ‘தமிழ் இலெமுரியா’ ஆகும். ஒவ்வொரு தமிழனும் அதன் வளர்ச்சிக்குத் துணை புரிய வேண்டும்.- மா.சுகுமார், கல்பாக்கம் – 603 102உயிர்த் துடிப்பு!உயிருக்கு உடல் தேவை; உடலுக்கு உணவு தேவை. அந்த உணவு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? என்பதை ஆய்வு செய்து எழுதப்பட்ட ‘எது சிறந்த உணவு?’ கட்டுரை இதழுக்கு மகுடம். மரபு மீராக் கவிதை வேண்டுமெனக் கூறும் கவிவேந்தரின் பாடல் அவரைப் போலவே பண்பால் சிறக்கிறது. தன்னலம் பேண ஊரையே அடித்து உலையிலே போடுவோரிடையேதான் அன்னை தெரசா போன்றோரும் வாழ்ந்து வரலாறு படைத்துள்ளார். சிற்றெறும்பின் நுண்ணறிவைப் பெற்று தமிழினம் முன்னேற வேண்டும் என்பதை சிற்றெறும்பு கவிதை வெளிப்படுத்துகிறது. - க.தியாகராசன்,  குடந்தை – 602 501நீதி கிடைப்பதில்லை!புரட்டாசி இதழில் ‘நாடற்றத் தமிழர்கள்’ தலையங்க உரையில் தமிழர்கள் தங்களைச் சுற்றியுள்ள மூன்று மாநிலங்களிலும் இழந்துள்ள தாய் மண்ணின் பெயர்களைக் கண்டு வருந்தினேன். உரையில் ஒரு குறை. வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதில்லை என்னும் வரிகளே அந்த குறைபட்ட வரிகள். இந்தியா முழுவதும் நீதி கிடைப்பது அரிதாகிவிட்டது. சல்மான்கானைப் போன்று கோடிகள் பல நீதியின் முன் விளையாடினால் நினைப்பது நிறைவேறும். சிற்றெறும்பு கவிதையில் அரிசி பதுக்கலில் ஈடுபடும் எறும்புகளைப் பார்த்தால் வியாபாரிகளின் நினைவு வருகிறது எனும் வரிகள் மிக அருமை.- மூர்த்தி,  சென்னை  600 100ஆக்கப்பணிகளுக்கான நேரம்‘நேர மேலாண்மை’ கட்டுரையில் குறிப்பிட்டுள்ளவாறு ‘எனக்கு நேரம் இல்லை’ என்று சொல்லுவது இந்த காலத்தில் எல்லோருக்கும் வழக்கமான ஒன்றாகி விட்டது. ஒவ்வொரு நாளும் நேரத்தை திட்டமிடல் மிக அவசியம். இதன் மூலம் தேவையில்லாத விடயங்களில் நாம் எவ்வளவு நேரத்தைச் செலவிடுகிறோம் என்பது தெரிந்து விடும். இவற்றை நீக்கி விட்டால் நமக்கு நேர மிச்சம் நிறைய கிடைக்கும். அதை வேறு ஆக்கப் பணிகளுக்குச் செலவிடலாம்.- எஸ்.மோகன்,  கோவில்பட்டி –  628 501மகிழ்ச்சியும் பெருமையும்!‘தமிழ் இலெமுரியா’ தொடர்ந்து கிடைப்பதுடன் உடனே படித்து முடித்து விடுவதுடன், வடக்கே இருந்து (மகாராட்டிரம்) அருமையாக தமிழ் மொழியை சிறப்புடன் இதழ்கள் மூலம் வெளியிடுவதை எண்ணி மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். தமிழ்ப் பணி சிறக்க எனது கரமும் உதவும். வாழ்த்துகள்.- ந.குணசீலன்,  வள்ளியூர் –  627 117பாராட்டத்தக்கது!எது சிறந்த உணவு கட்டுரையில் உணவு எதற்காக என்று அடுக்கிச் சொல்லப்பட்ட விபரங்களும், உணவு  வணிகப்பொருளாகி,  ஆளுமைக்கும்; பொருள் ஈட்டத்துடிக்கும் மேலை நாடுகளின் கைப்பொருளாக நமது நாட்டு மருத்துவகுண உணவுப் பொருள்கள் மாறுவது மாபெரும் தவறு என்று கட்டுரை சுட்டியுள்ளது பாராட்டத்தக்கது!துரை.சௌந்தரராசன்,  காஞ்சிபுரம் – 631 501"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி