19 August 2015 12:06 pm
நோபல் பரிசு கிடைத்ததே போதும் சுரேகா என்கிற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டு கவிதை நடையில் வந்த என்று தணியும் இந்தக் கொடுமை" தகவல்கள் வாசித்தேன். பெரிய இடத்துப் பெண் பொய்வழக்கு போட்டால் அவதூறு வழக்குகளாக பதிவிற்கு வருகிறது. சிறிய இடத்துப் பெண்களுக்கு வருகின்ற பெரிய பெரிய கொடுமைகள் வக்காலத்து இல்லாமல் வழக்கேறாமல் சாய்கின்றது. நாடு முழுக்க நீதிமன்றங்கள், ஆனால் நீதி மட்டும் எங்கேயோ போய்க்கொண்டு இருக்கிறது. தலையங்கம் கண்டேன் மன்மோகன் சிங்கின் மவுனத்தனமான ஆட்சியை கேவலமாக விமர்சித்துவிட்டு, ஆட்சியை பிடித்த மோடி, மன்மோகன் சிங் – 2 பாணியில் செயல்படுவதை சுட்டிக்காட்டிவிட்டு, இந்தியாவில் மக்களின் மருத்துவம் வேதனைபடும் அளவில் உள்ளதை விளக்கியது உண்மை. பர்மாவில் ஓர் அத்திப்பட்டி கிராமம், முதன்மை கட்டுரையில் ரோகிஞ்சா மக்கள் படும் கொடுமைகளை படித்தேன். ஈழத்திலும் ரத்தவெறி பிடித்தலைகிறது புத்தம், பர்மாவிலும் அப்படியே. ஆங்சான் சூச்சியின் ஆழ்ந்த மவுனத்தை அறிந்தபோது, அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்ததே போதும் என்று ஒதுங்கிவிட்டார் போல் தெரிகிறது.தாய்மையின் முகங்கள் சிறு கதை அருமை. - மூர்த்தி, சென்னை – 600 100மீண்டும் வருவார்களா? ஆடி இதழைத் திறந்ததுமே கோடி ஊசிகள் இயத்தைத் தைந்தாற் போல் ரோகிஞ்சா செய்திகள் அதிர்ச்சியளித்துக் கண்ணீர் விட வைத்தது. இலங்கைக்கு நாங்கள் இளைத்தவர்கள் அல்ல என்று அங்கவர் நடத்தும் மனித வேட்டைகள் இந்தப் புவியில் மனிதர்களாக வாழும் உயிர்களுக்கெல்லாம் பெருத்த அவமானமாகவே உள்ளது. எப்படி இப்படியெல்லாம் பத்தர் போதனை மண்ணில் ஒவ்வொருவர் உள்ளமும் செயல்படுகிறது என்றுதான் புரிய வில்லை. மதங்கள் – இரத்த வெறிகளை உண்டு பண்ணவா தோன்றின. எல்லாவுயிரும் இன்புற்றிருக்கப் பாடுபடும் மதம் எது? அம்பேத்கர், மண்டேலா போன்றவர்கள் மீண்டும் வருவார்களா…? அவர்கள் எந்த மனிதனுள் தோன்றி வந்தாலும் வரவேற்கலாம்.- க.அ.பிரகாசம், கொடுமுடி – 638 151அனைத்தும் சிறப்பே !தமிழ் இலெமுரியா தலையங்கம் முதல் அமைந்து பக்கம் அனைத்தும் சிறப்பு!அத்துடன் சமூக அக்கறைச் செய்திகள் முத்துடன் மணிகள் முகிழ்த்தது போலமெத்தக் கவர்ந்தன; மேவிய கருத்துகள் சத்து நிறைந்தன; சால்புடன் இதழும்வருவது கண்டு மகிழ்ச்சியே! பெரும்புகழ் பெறுக; பேணுக இதழே!- த.இராமலிங்கம், நெய்வேலி – 607 308பச்சையாக சாப்பிடலாம் ஆடி மாத இதழில் ‘சமைத்த உணவைத் தான் சாப்பிட முடியுமா? குறிப்பு பயனுள்ளதாக இருந்தது. எல்லா வகைப் பழங்களையும் எதுவும் சேர்க்காமல் பச்சையாக சாப்பிடலாம். ஆவியில் வேக வைத்து சாப்பிடுவது எல்லாமே உடலுக்கு நல்லது. ஆனால் சுவைக்காக எண்ணையில் பொறித்த பாதார்த்தங்களையே அனைவரும் விரும்புகின்றனர். அது உடலின் ஆரோக்கியத்தை கெடுக்கிறது. சமைக்க அவசியமில்லாத சில உணவு தயாரிப்பு முறைகளை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.- எஸ்.மோகன், கோவில்பட்டி – 628 501தமிழ்த் தேசியம் – பகல் கனவே ! பாவேந்தர் பாரதிதாசன் – கவிதைகளிலிருந்து, தக்கவைகளைத் தேர்ந்தெடுத்து, அவர் விரும்பிய தமிழ்த் தேசியத்தைக் கண்டறிந்து, தமிழ்த் தேசியத்திற்கான கொள்கைகள், நோக்குகள், திட்டங்களையும் மிகச் சிறப்பாக ஆய்வு கண்டு வடிவம் தந்த கட்டுரையாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! தமிழகத்து மன்னர்களுக்குள்ளே ஒற்றுமையின்மை மாற்றாருக்கு வரவேற்பளித்தது. வரலாறு காட்டும்! திரைகடலோடி திரவியம் சேர்க்கச் சென்றோரும், வறுமையின் கோரப்பிடியிலிருந்து தப்பிக்க பிறநாடு சென்று வளத்தவர்களும் – உளர்! தமிழர்களின் தாயகம், இலெமுரியா கடலினுள் முழ்கியது; – எஞ்சிய தமிழகம் இந்தியத் திரு தாயகம் என குரல் தரலாம். – தனித்தன்மை காண முடியாது! நாட்டின் ஓர் அங்கமாகியது. பிறநாடு சென்றோர் – செல்வந்தராகி பிற நாட்டு வாழ்வுரிமை பெற்றுவிட்டார். பரந்த நிலப்பரப்பு கிடைத்தல் – அரிது! இந்த அளவில் ‘தமிழ்த் தேசியம்’ அமைதல் என்பது பலதிசையில் பரவி விட்ட உலகத்தமிழர்கள் ஒன்று சேராத கற்பனை வடிவமே!- துரை.சௌந்தரராசன், காஞ்சிபுரம் – 631 501மதமொழித்த அம்பேத்கர்இதழ்முகப்புக் கண்ணீரில் தான் மிதக்கும் இளமொட்டின் தாயவளின் சோகம் சொல்லபதம் கெட்ட ரோகிஞ்சா மக்கள் வாழ்க்கைப் பர்மியரின் அதர்மத்தைப் படமாய்க் காட்டிஇதமாகப் பிணிதீர்க்கும் பணியை மேவ எடுத்தியம்பி மண்டே லாஉரையின் வீச்சும்மதமொழித்த அம்பேத்கர் இதய மூச்சும் மலர்வித்த தமிழ்இலெமுரி யாவை வாழ்த்து!- அறிவுத்தொகையன், திருலோக்கி – 609 804உன்னதமானது ! ஒரு நாட்டின் மெய்யான வளம், – நலம், – நயம் குன்றி பிணியால் வாடி வதங்கி நிற்கும் மக்களின் அவல நிலையை ஆதாரங்களுடன் புள்ளி விவரங்களுடன் எடுத்துரைத்து மக்கள் நலம் தாங்கும் "மருத்துவத்திட்ட ஒதுக்கீடுகள் மிகைப்படுத்தப்பட வேண்டும்" என அரசுக்கு வேண்டுகோள் விடுத்து, பிணிதீர்ப்பதே பணியெனக் கொள்க! என வேண்டுகோள் விடுத்து எழுதப்பட்ட தலையங்கத்தில் அர்த்தங்கள் ஆயிரம் பொதிந்துள்ளன. காதல் மாயையில் விழாதீர் என அன்புக் கட்டளையிட்டு ஆசுகவி ஆராமுதன் எழுதிய கவிதை இன்றைய இளைஞர்களுக்கு சரியான பாடம்! திருந்தாத ஜென்மங்கள் இருதென்ன? இல்லாவிட்டால் என்ன? பூவாயி பெத்த செல்வியை தன் மகளாக ஏற்று பூவாயியை விரட்டி அடித்த பெரியாயி, செல்வியை தன் மகளாக ஏற்றுக் கொண்ட மனம் உன்னதமானது! சுரபி விஜய செல்வராஜ் எழுதிய, ‘தாய்மையின் முகங்கள்’ சிறு கதையும் சரி அதற்கு வரையப்பட்டிருந்த படங்களும் சரி மிகவும் அருமை. - ப.லெ.பரமசிவம், மதுரை – 625 009வாழ்த்துகள் ! வணக்கம், ‘தமிழ் இலெமுரியா’ ஆடி மாத இதழில் பாவேந்தரும் தமிழ்த் தேசியமும் என்ற கட்டுரைகள் படிப்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது. தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் ஆகிய தலைவரைப் பற்றி கருத்துகள் அழகாக இருந்தன. இதை வெளியிட்ட ஆசிரியர்க்கு உலக தமிழர்களின் சார்பில் பாராட்டுகள் நன்றிகள்! தமிழ் இலெமுரியா இதழ் மேலும் வளர வாழ்த்துகள்!- அ.காஜா மைதீன், பழனி – 624 601பொதுமை நலன்… அரசியல், ஆட்சியியல், ஆளுமை அதிகாரம் பற்றுவோர் மக்கள் மனதை உரசி மாயைகட்டு செய்து, சாதி, மதம், மதர்ப்பு தன்னகங்காரம் செருக்கொடு கீழ்மை உறுத்து செயல்பாடுகளில் கடந்திருக்கும் காலத்தில் அமைவுற்றுள்ளனர்! பொதுமை நலன் ஓம்பலும் காத்தலும் தம்பணி என்று கொண்டிலர்! தீட்டும் திட்டங்கள் எல்லாம் கறவுள்ளம் கொண்டோர் ஆட்சியாளரால் தன்னலிச் சார்பு பேணலுக்கு ஊழல் ஊற்று அடி நிலைபாடாகவே அமைவுறுத்த பட்டவையாகும்! பிணி தீர்க்கும் பணி திட்டமும் மறைதிரை ஊழல் செயல் கையூட்டிற்கு அடிப்படையால் அமைவுற்றதே ஆகும்.- அ.ம.பெ.காவளர் தமிழ் அறிவன், பேட்டை வாய்தலை – 639 112ஊடகப் போதை ‘தமிழ் இலெமுரியா’ தமிழர்களின் குரலாக மேலும் வளரட்டும். வெளி மாநிலத் தமிழர்களே தமிழுணர்வுடன் காணப்படுகிறார்கள்! தமிழ் மண்ணின் தமிழர்கள் தமிழால் பிழைக்கும் பிற மொழியில் அடிமைகளாகி அவர்கள் ஊடக போதையால் சிந்தனை அடிமைகளாகியுள்ளனர். ‘திரு’ மறைந்து ஆரிய ‘ஸ்ரீ’ எங்கும் எதிலும் ஏறுவது திராவிடத் தமிழன் பின்னடைந்தற்கான அரிகுறியாகும்- பம்பாய் புதியவன், கல்பாக்கம் - 603 102இரும்புக்கரம் மியான்மர் நகர் எனப்படும் பர்மாவில் நடைபெற்ற ஈவிரக்க மற்ற இனப்படு கொலையைப் படித்து உறைந்து போனேன். ஈழ இனப்படுகொலையின் ஈரம் காயுமுன்னே இப்படி ஒரு படுகொலையா? என அதிர்ந்தேன். உலகில் நடை பெறும் அனைத்து இனப் படுகொலைகளும் ஆதிக்க வெறி கொண்ட தன்னல வெறியர்களாலும் மத வெறியர்களாலும் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மனித நேயமே இல்லா அந்த மனித விலங்குகளால், மனித குலமே தலை குனிகிறது. நாத்திகர்களால் உலகில் யாருக்கும், எந்த வகையிலும் உயிர்ழப்புகள் எற்பட்டதாக வரலாறில்லை. மாறாக அனைத்து போர்களும் படுகொலைகளும் இன அழிப்பு இழி செயல்களும் மத நம்பிக்கையாளர், ஆணவ வெறிகொண்டோரால் மட்டுமே நடத்தப் பட்டு வருகிறது. அவர்களே மனித குலத்தின் பகைவர்கள். பயிரில் களை எடுப்பதைப் போன்று இத்தகைய மனித களையைக் வேரோடு பிடிங்கி எறிந்தால் தான் மனித குலம் தழைக்கும். ஒரு அடிமையால் இன்னொரு அடிமையின் கண்ணீரைத் துடைக்க முடியாது. ஆகவே, அய்.நா போன்ற உலக நாடுகள் கூட்டமைப்பு தன்னுடைய இரும்புக்கரம் கொண்டு இத்தகைய கொடுமைகளைத் தடுத்து நிறுத்திட வேண்டும். இல்லை யெனில் அத்தகைய அமைப்பு இருந்தும் பயனில்லை. இதனை வெளிக் கொணர்ந்த ‘தமிழ் இலெமுரியா’வுக்கு நன்றி.- க.தியாகராசன், குடந்தை – 612 501"