மராத்தியர்கள் நடத்திய பெரியார் பிறந்தநாள் விழா - தமிழ் இலெமுரியா

16 October 2016 12:36 pm

மத்திய  இரயில்வே பணியாளர்கள்  அமைப்பினரால் தோற்றுவிக்கப்பட்ட ஜே.எஸ்.கே அறக்கட்டளையின்  சார்பாக பெரியார்  பிறந்தநாள்  விழா மராத்தியர்களால்  கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து அம்பேத்கர், சாகு மகராஜ், மகாத்மா ஜோதிராவ்  புலே ஆகியோரின்  பிறந்தநாளையும்  பார்ப்பனிய ஆதிக்க ஒழிப்பு குறித்த கருத்தரங்கையும்  மையமாகக்  கொண்ட இவ்விழா மேடையிலேயே விழாவில்  கலந்து கொண்டவர்கள்  சிலரின்  கருப்பு, காவிக்  கயிறுகள்  அகற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில்  ‘தமிழ் இலெமுரியா’ முதன்மை ஆசிரியர்  சு.குமணராசன்  கலந்து கொண்டு உரையாற்றினார். இவ்விழாவில்  மும்பை திராவிடர்  கழகத்  தலைவர்  பெ.கணேசன், பகுத்தறிவாளர்  கழக அமைப்பாளர்  அ.இரவிச்சந்திரன், தமிழ்  காப்போம்  அமைப்பைச்  சார்ந்த இறை.ச.இராசேந்திரன், பூலாங்குளம் ஜெ.சுகுமாறன், அ.கதிர்வேல்  ஆகியோர்  கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில்  200க்கும்  மேற்பட்ட மராத்தியர்களும்  பிற வட மாநில மக்களும்  கலந்து கொண்டு தந்தை பெரியாரின் தொண்டு குறித்து சொற்பொழிவாற்றினர்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி