16 March 2014 12:39 am
மராத்திய மாநிலம் தானே ரோட்டரியின் (Rotary Club of Thane) அங்கமாக விளங்கும், ரோட்டராக்ட் மற்றும் இண்டராக் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊனமுற்றக் குழந்தைகளுக்கான வெற்றி ஓட்டம் தானே பகுதியில் நடைபெற்றது. சற்றொப்ப 800 மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஓட்டப் பந்தயம், ஓவியப் போட்டி, அழகு பொருள் உருவாக்கம் என மாற்றுத் திறனாளி குழந்தைகளின் திறன் வெளிப்படும் வகையில் பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. குழந்தைகளின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு ரோட்டரி சங்கத் தலைவர் மருத்துவர் சுபாஸ் குல்கர்னி முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். ஓட்டப் பந்தயத்தை திருமதி நங்கை குமணராசன் கொடியசைத்து துவங்கி வைத்தார். இவ்விழாவில் ரோட்டரி சங்கங்களைச் சார்ந்த மகளிர் பிரன்ஜலால் ஜெயின், அய்சுவரியா மண்டேல்வால், அனுஜா குல்கர்னி உட்பட ஏராளமான ரோட்டரி சங்க நிருவாகிகளும், அங்கத்தினர்களும் கலந்து கொண்டனர். உடல் ஊனமுற்ற ஒரு சிறுவன் தன் கால்களால் வரைந்த ஓவியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.