17 June 2014 9:09 am
காளைகளின் திமிருடைத்தாய்வேளையெல்லாம் சிலம்படித்தாய்கட்டுமர உடம்புகண்டு மலைச்சேன் – அம்மிக்கல்லுடைச்ச மார்புகண்டு தெகைச்சேன்.எட்டுமரம் நெட்டிவிடும்கெட்டியான கட்டை விரல்பட்டுமலை முடிதெறிக்கப் பார்த்தேன் – கண்பட்டிடுமோ எனவெண்ணி வேர்த்தேன்.காலிரண்டும் தேக்குமரம்கையிரண்டும் யானைபலம்ஆ÷மைõடு போலகெண்டை சதையும் – பார்த்துஅசையாத மனங்கூட அசையும்ஆசைவைச்சேன் ஆசைவைச்சேன்அதனாலே ஆசைவைச்சேன்காசுபணம் மேடுபள்ளம் உடைத்தாய் – என்னைக் கைபிடித்துக் கனிகளையும் கொடுத்தாய்நாளும்நாளும் மகிழ்ச்சிவெள்ளம்நயந்தளித்த உனக்குமின்றுமேலும்கீழும் இழுக்கிறது மூச்சு – குடிமேவியதால் உடம்புகெட்டுப் போச்சுபிள்ளைபள்ளி போகவில்லைபிறந்ததுக்குப் பாலுமில்லைசல்லிக்காசு கொடுக்கவில்லை குடிக்கிறாய் – மதுவைச்சாய்ச்சிக்கிட்டுக் கண்டஇடம் கிடக்கிறாய்.உன்னுடைய ஆற்றலெல்லாம்ஒடைஞ்சசட்டி பானையாச்சுஎன்வாழ்க்கை தொங்குதின்று கயிற்றில் – ஐயோஇன்னுமொன்று வளருதையா வயிற்றில்எனக்கிண்ணு யாரிருக்கா?இதுக்காநான் ஆசைவைச்சேன்நனைகின்ற மண்சுவராய்க் கரையுறேன் – நீநச்சரவு மதுகுடிச்சுத் திரியுறே!வெள்ளமோடும் இலைமேவீழ்ந்துவிட்ட எறும்புபோலஉள்ளமெல்லாம் நடுங்குதையா எனக்கு – உனக்குஉயிரெல்லாம் மதுமேல இருக்குபிறந்தபயன் தேனளக்கபெருமையெல்லாம் வானளக்கசிறப்பாக இருக்கமாலை சூட்டினேன் – இப்படிச் சீரழிய வாகழுத்தை நீட்டினேன்?கரும்புக்குள்ளே காட்டுயானைகங்கைக்குள்ளே கழிவுநீருஇருப்பதையும் யாரிங்கே பொறுப்பார்? – குடியை ஏற்பதென்றால் உன்னுடன்யார் இருப்பார்?மதுவருந்தா நாட்டிற்கேமதிப்பிருக்கும் எனவறிந்தும்மதுவிற்குள் மக்களையா புதைப்பது? – மயக்கும்மதுகொடுத்தா வாழ்க்கையினைச் சிதைப்பது?மதுக்கடைகள் அரசேற்கமதிக்கடைகள் தனியார்க்காம்இதுதானா குடிகாக்கும் முறைமை – இதில் இருப்பதெங்கே அரசோச்சும் திறமை- சின்னமணல்மேடு த.இராமலிங்கம்