ஈரோட்டுத் தந்தை ஒரு பகுத்தறிவு சிங்கம் - தமிழ் இலெமுரியா

11 September 2016 4:15 pm

ஈரோட்டுத் தந்தை ஒரு பகுத்தறிவு சிங்கம் – உலகம்பாராட்டும் புகழ்படைத்த பத்தரை மாற்றுத்தங்கம் (ஈரோட்டு)மாறாட்டம் செய்துவிட்ட ஆரியத்தை – மனிதனைமடமையில் ஆழ்த்துவிட்ட வேதியத்தைநீரோட்டம் போல் சீறி எதிர்த்து நின்றார் – பெரும்போராட்டம் செய்து கருத்தை விதைத்து வந்தார் – அந்த (ஈரோட்டு)சாதிகள் ஒழிந்தால்தான் சமத்துவம் பிழைக்கும் – பலசாமிகள் ஒழிந்தால்தான் சமதர்மம் தழைக்கும்நீதி நிலைத்தால்தான் நிம்மதி கிடைக்கும் – அதையும்நல்லோர்கள் நினைத்தால்தான் நல்லதே நடக்கும் – என்ற (ஈரோட்டு)பெண்ணுக்கு சமவுரிமை கோருகின்றார் – இங்கேபெண்ணடிமை ஏனென்று சாடுகின்றார் – இந்தமண்ணுக்குள் எல்லோரும் ஓரினந்தான்- இதைநாம்எண்ணாமல் இருக்கும்வரை ஏளனம்தான் – என்ற(ஈரோட்டு)உளியால் அடித்த கல்லு தெய்வமா? – அதற்குஉயிர்ப்பலி கொடுப்பதென்ன நியாயமா?புளியால் தேய்க்கும் செம்பு பேசுமா? – அதைப் போற்றினாலே உடற்பிணிகள் தீருமா? – என்ற (ஈரோட்டு)- பாவலர் கொ.வீ.நன்னன், மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர், செங்கம்உலக மாமேதை  அறிஞர் அண்ணா!முத்தமிழ்தாம் நன்குகற்று முதன்மை பெற்றார் முழக்கமிட்டார்! மேடை தோறும் பேசும் பேச்சால்இத்தரணி மக்களெல்லாம் ஏற்றுக் கொண்ட இன்சொல்லன் சொல்வல்லன் அறிஞர் அண்ணா!கத்திதன்னை தீட்டாதே என்று சொல்லி கவிதைதன்னில் நற்கருத்தும் நினைவில் ஏற்கபுத்திதன்னை தீட்டுநாளும் புதுமை காண்பாய்! புரிந்துகொள்ள எழுதிவைத்தார் அறிஞர் அண்ணா!சத்தியத்தில் ஊன்றியநல் காந்தி அண்ணல் சரித்திரத்தில் தென்னாட்டு காந்தி அண்ணா!சித்திரமாய் உள்ளத்தில் நிலைக்கும் வண்ணம் சீர்செய்தார் திரையுலகை அறிஞர் அண்ணா!முத்திரையை பதித்தார்கள் மக்கள் எல்லாம் முதலமைச்சர் ஆனாரே மேதை அண்ணா!சித்தத்தால் சிலவாண்டு ஆட்சி செய்து சிறப்போடு புகழ்பெற்ற அறிஞர் அண்ணா!மத்தியிலே ஆண்டவர்கள் ஆட்சி செய்ய மாண்டார்கள் சென்னைபெயர் மாற்ற வேண்டி!முத்தாக தமிழ்நாடு பெயரை வைத்து முழுமூச்சாய் ஆட்சிசெய்த அறிஞர் அண்ணா!நித்திரைகொள் தமிழறிஞர் நினைவு போற்ற நிலையாக சிலைகள்தான் நிறுவச் செய்தார்!வித்தாக அன்றுபோட்ட விதைகள் நாளும் விளைந்தனவே! வழிகாட்டி! தலைவர் அண்ணா!- ம.மயில் இளந்திரையன், கோவை

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி