உணர்ந்து பாரீர் - தமிழ் இலெமுரியா

16 December 2014 2:38 pm

தவறுகளைப் புரிந்துள்ள குற்றவாளி  தண்டிக்கப் படுவதிலே என்ன குற்றம்? தவற்றுக்கு  நாணுவதே மாந்நர் பண்பாம்;தவற்றினையே தவறில்லை என்று கூறல்தவறன்றோ? இவற்றுக்கு முடிவு வந்தும்  தாண்டுவதும் குதிப்பதுவும் தேவை தானா?உவர் நிலமோ ஒருபோதும்   நன்செய் ஆகா! உயரத்தில் பறந்தாலும் உண்மை சாகா!மெய்ம்மையினைப் பொம்மையெனப் பிதற்றி நாட்டை மிரட்டிடுவோர் ஊனக்கண் திறப்ப தென்றோ?பொய்தன்னைத் தொடர்ந்திங்கே உரத்துச் சொன்னால்  புரியாதார் மெய்யென்றே  நம்பக் கூடும்;பொய்,மெய்க்கு  நடுவிலுள்ள  வேறு பாட்டைப் பொறுப்புடனே  சிந்திக்க வேண்டும்; என்றும் பொய்யுரையை அறிவுடையோர் ஏற்றுக்கொள்ளார் புல்வர்களின் வெறியாட்டம் புகழைத் தேய்க்கும்! அறம்வெல்லப் போராட வேண்டும் ;நாட்டின் அழிவுக்கே அடித்தளங்கள் அசைப்போர் தம்மைப் புறந்தள்ள வேண்டும் நாம்; வரலாற் றேட்டின்  பொல்லாத பக்கத்தை   நீக்கல் வேண்டும் திறத்தோடு கயமைக்குத்  துணையும் நின்றால் திருவோடு நம்கைக்கு வந்து சேரும்;பொறுப் புணர்ந்து வாழ்வதுவே சிறப்பை  நல்கும்  புல்லறிவோர் நல்லோரை வீழ்த்தல் ஆகா! ஏய்ப்பவரை அடையாளம் கண்டால் நேரும்  இடரினின்றும் தப்பிக்க நம்மால் ஆகும்; மேய்ப்பவரை நம்பாத ஆடா நாமும்?  மேன்மையினைத் தடுப்பதற்கே பள்ளம் தோண்டிச் சாய்ப்பதற்கே பொழுதெல்லாம் முயலு கின்ற  சழக்கர்தம் வஞ்சகத்தை வீழ்த்தல் வேண்டும் காய்க்கின்ற மரமென்றும் கயவர் தம்மின்  கல்லடிக்குத் தப்பிடுமோ? உணர்ந்து பாரீர்! – முனைவர் கடவுர் மணிமாறன்

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி