உயர் தலைமை - தமிழ் இலெமுரியா

17 June 2014 8:47 am

இருபதின் இளமை அறுபதின் பொறுமை இணைத்திடும் முப்பதின் வன்மைஉருவினில் எளிமை உள்ளமோ கருணை உழைத்திடும் உறுதியில் நேர்மைகருத்தினில் புதுமை கலந்திடும் பழைமை காரியம் முடிப்பதில் கடுமைஒருமன தோடு இயங்கிடும் தன்மை உண்மையாய்க் கொண்டவன் தலைமை. வருநிலை உணர்ந்து காத்திடும் திறமை வாக்கினில் நிறைந்திடும் வாய்மைசெருநரை அடிமை செய்திடும் வலிமை சிறுமையைக் களைத்திடும் பெருமைதெருவினில் ஏழ்மை தீர்த்திடும் தன்மை தெளிவுற ஆள்வதில் ஆண்மைஅருநெறி யாவும் அகத்தினுள் உடைமை அணிந்தவன் அழகிய தலைமைகுருவினைப் போல நல்லறி வுடைமை கொள்கையின் வழியினில் தூய்மைபெருமன தோடு பெற்றிடும் புகழை பிறிதென ஒதுக்கிடும் எளிமைபருவமு மறிந்து பாதையு முணர்ந்து பண்புடன் செயல்படும் மகிமைதிருவெனப் பெற்றோன் தேர்ந்திடக் கிட்டின் தெளிவுறு; அவனுயர் தலைமை. – கே.பி.பத்மநாபன்

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி