10 September 2013 11:58 pm
பேராசைப் பெருந்தீதான் கொழுந்துவிட்டு எரிய பெற்றதிரு தாய்மண்ணைக் கற்பழிக்கும் கூட்டம்தீராத ஊழலெனும் பேய்க்கூத்து ஆடி திகட்டாது மக்களது குருதியினை, நாளும்நீராக உண்கின்ற நிலைபலநாள் கடந்தும், நிறைந்திலையோ தாகம்தான்; என்றிங்கே தணியும்?போராடும் மக்களது கும்பிநிறை பசித்தீ புதுவாழ்வுப் புனலாலே என்றிங்கே தணியும்?அடிமையெனும் விலங்கொடித்து ஆனந்தம் கண்டு அடங்காத சுதந்திரத்தின் தாகத்தைத் தீர்க்கஇடிக்குரலில் பாரதியும் பாடினானே அன்று; என்றிங்கே தணிந்திடுமோ சுதந்திரத்தின் தாகம்?விடிந்திட்ட பாரதத்தில் வேற்றடிமை ஆட்சி விளைந்திடுமென் றவனும்தான் அறிந்திடவே இல்லை;மிடிமையால் கும்பிகளில் எரிகின்ற தீதான் மெய்யான தாகமடா; என்றிங்கே தணியும்?ஊழலொடு வன்முறையும் அநீதியுடன் சேர்ந்த ஊழிக்கூத் தெல்லாமே என்றிங்கே தணியும்?ஆழமுடன் வேர்பதித்த அடக்குமுறை ஆட்சி அதிகார ஆணவத்தீ என்றிங்கே தணியும்?சூழலையே மாசாக்கி சொத்துக்கு விக்கும் சுயநலத்தின் கொடுமையெலாம் என்றிங்கே தணியும்?வாழஇடம் தாராமல் வறுமைத்தீ வளர்க்கும் வஞ்சகரின் கொட்டம்தான் என்றிங்கே தணியும்?- கே.பி.பத்மநாபன், கோவை.