தமிழ்த் தன்மானம் கா! - தமிழ் இலெமுரியா

17 March 2015 7:59 pm

தன்மானம் தன்னையே தரைமட்ட மாக்கித் தன்னலத்தைக் கோபுரமாய்த் தன்னுள்ளெ ழுப்பிபுன்மானப் பொருளுக்காய்ப் புரந்தாரைத் தள்ளிப் போகின்றார் அடிமையாய் அயல்மண்ணை நண்ணி;தன்மானம் காப்பதற்காய்த் தலையீந்த தமிழன் தரணியிலே பெம்மானாய் வாழ்ந்திட்ட தமிழன்சன்மான கூலிக்காய்ச் சாக்கடையில் வீழ்தல் சரியாமோ? சால்பாமோ? சற்றேசிந் திப்பீர்!பொன்மணிகள் பூட்டியிட்ட சிறுதேரை மழலை புழுதியிலே ஓட்டிவிளை யாடிட்ட மண்தான்;நென்மணிகள் வயலினிலே சிதறியதால் மேழி நேராக ஓடாது நின்றிட்ட மண்தான்;நன்மனதால் யாவருக்கும் நாடியதை ஈந்து ஞாலத்தில் தமிழீரம் உயர்த்திட்ட மண்தான்;புன்மையுடன் பொருளுக்காய்ப் புகழ்தமிழை மறந்து போக்கற்றோர் போலயலில் புகுதல்தான் நன்றோ?தன்னாடு தன்மக்கள் தன்மொழியே என்று தலைநிமிர்ந்து தன்மானம் காத்திட்ட தமிழன் இன்னாத அயல்மோக போதையிலே வீழ்ந்து ஈனமுடன் ஏன்வாழ வேண்டும்சிந் திப்பீர்;பொன்னாலே செய்திட்ட மணிமகுடம் தன்னைப் புழுதியிலே எறிவதுவோ புத்தியுள்ள செய்கை?ஒன்னாது இச்செய்கை என்றுணர்ந்து உடனே உயிர்தமிழன் தன்மானம் காத்திடவே எழுக!- கே.பி.பத்மநாபன், கோவை

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி