18 May 2014 6:05 am
மூவரில் ஒருவன் முன்னுக்கு வந்தால்முதுகைத் தட்டிப் பாராட்டு!மூவரில் இருவர் ஒன்றாய்ச் சேர்ந்துமுதுகில் குத்தப் பார்க்காதே! ஒருவர் கருத்தை ஒருவர் எதிர்த்தால் உடனே பகையாய்க் கருதாதே! இருவரும் ஒன்றாய் இனிக்கப் பேசிய இறந்த காலத்தை மறவாதே!துரும்பு இனிமேல் உதவா தென்றுதூரத் தூக்கி எறியாதே!கரும்பு சுவையாய் இருக்கு மதனைக்கடித்து வேரை குதறாதே! கோழி உம்மைக் கொத்திட வந்தால் குஞ்சினைக் காலில் மிதிக்காதே! முதியோர் செய்த பிழையை எண்ணி முகிழ்க்கும் அரும்பைத் துவைக்காதே!கழித்ததை யெல்லாம் எடுத்து உண்டிடக்கழிநீராடும் விலங்குப் புத்தியல்ல!உழுபவன் விதைக்கப் பார்க்கின்றான்உண்மை அறிந்து தெரிந்திடுவா! – து.மருது