புதுப் பொங்கல் நன்னாள் பொலிக! - தமிழ் இலெமுரியா

14 January 2016 9:26 pm

ஒளிரும்  நிறங்கொண்ட நெடுங்கதவு திறந்துவந்த தை என்னும்  செல்வமகளுக்கு நல்வரவு!ஞாலத்தின் அடிவயிற்றில்  முளைவிட்டு இலைவிடும்முப்போதும்  எழுந்துவரும்  ஆதித்தீஎரிதழல்  எனப்பரவும்  பசித்தீ!கடலைச்  சுருக்கி உருவம்  கொண்டமேகத்தின்  பனிக்குடம்  உடைந்ததுமின்னல்  சடைவிரித்துப்  பெய்ததுஅடைமழை உடன்  ஆலங்கட்டி மழை!காய சண்டிகையின்  யானைப்பசி தீர்க்கும்  கலப்பைஉழவனிடம்  வழிந்த வியர்வைத்  துளிஉரமிட்ட தலைமகன்  களைகட்டிய தமிழ்  மக்கள்!முல்லை குறிஞ்சி மருதம்  நெய்தல்  என்று நானிலத்  தோற்றம்  கொண்டநிலம்  என்னும்  நல்லாள்!கரு இருந்து ஈன்ற கதிர்மணிகள்!உழவு மாடுகளின்  கழுத்து மணிக்  குரல்பனிப்படலம்  விரியப்  புலரும்  பொழுது!வெண்ணிறத்  திவலைகளைச்  சூடிக்  கொண்டுநாற்றிசையும் பொங்குகிறது பொங்கல்!பொன்னேர்  உழவனைத்  தொழுது போற்றுதும்புதுப்பொங்கல்  நன்னாள்உலகம்  பொலிக!  – பூ. அ. இரவீந்திரன், கோவைபுதுப்பொலிவுப் பொங்கட்டும்!இயற்கையை இறையாய் வணங்குவோம்!இயற்கையாய் மண்ணில் மனிதராய் பிறந்தஎல்லாரும் ஒரே மனித இனந்தான் என்றேஎண்ணாமல் ஏற்றத் தாழ்வுகளாய் வாழ்கிறோம்!மண்ணுலகில் மனிதர் மனம் அமைதி பெற வேண்டுமெனில் இயற்கையிடம் மனிதரும்மோதாமலிருக்க வேண்டுவோம்!இயற்கையின் வழித்தடத்தை வழிவிட்டு வாழ்த்துவோம்!நா நிலத்திலுள்ள மக்களும் மனிதநேயமாய்வாழவும் ஒன்றேகுலம் ஒருவனே தேவன்என்றுணர்த்திய இயற்கைக்குத் தமிழ்ப்புத்தாண்டில் புத்துணர்வு பொங்கலிடுவோம்!புது வாழ்வுப் புன்னகை மலரட்டும்!புவி யெங்கும் புதுப்பொலிவுப் பொங்கட்டும்! -இரா.சொ.இராமசாமி, கோவை

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி