17 June 2014 8:47 am
தன்னலச் சேற்றில் வீழ்ந்த தமிழரே! ஒரு சொல் கேளீர்!என்னுயிர், தமிழே என்பீர் இடரெலாம் அதற்குச் சேர்ப்பீர்!பன்னரும் இரண்ட கத்தால் பாதையை மாற்றிக் கொள்வீர்!நன்மையே செய்யும் நோக்கும் நாட்டமும் தொலைத்தீர் போலும்குறைகுடம் ஆனீர்! நஞ்சாம் கொடியன உவந்து செய்வீர்!நிறைகுடச் சான்றோர் தம்மின் நிழலையும் நெருங்க எண்ணீர் உறைபனி போல வாட்டி உறுதுயர் விளைப்பீர்! வாழ்வில்கறையெலாம் பற்றிக் கொள்வீர்! களங்கமும் பெருமை என்பீர்!நீட்டியே முழங்க வல்லீர்! நெடும்பகைத் தடுமாற் றத்தால்காட்டியும் கொடுப்பீர்! என்றும் காழ்ப்புணர் வாலே ஒற்றைக்கூட்டுவீர்! குறைப்பீர்! கொண்ட கொள்கையை விற்பீர் எல்லாமாட்சியும் பறிபோ னாலும் மறவனும் நானே என்பீர்!ஒற்றுமை மறந்தீர்! நல்ல ஒப்புர விழந்தீர்! தாங்கும்கற்சுவர் போல நிற்பீர் காயினைக் கனியே என்பீர்!வெற்றியை எய்து தற்கே வெம்பழி வரினும் நாணீர்!முற்றுமே மானம் போக்கி முகவரி இழத்தல் நன்றோ? – முனைவர் கடவூர் மணிமாறன்