18 May 2014 6:05 am
நிலமெங்கும் வேளாண்மை பெருக வேண்டும் நீர்நிலைகள் மனையாதல் அருக வேண்டும்குளங்குட்டை தூர்வாரிக் கொட்ட வேண்டும் குடிநீரின் தேவையினை எட்ட வேண்டும்வேலைமேல் வேலைகளைப் பெருக்க வேண்டும் வெட்டிப்பேச்சு வீண்வம்பு சுருக்க வேண்டும்கொலைகொள்ளை அடியோடு குறைய வேண்டும் கொடுத்து வாங்கும் பொருளும் நிறைய வேண்டும்மதுவுக்கு அரசாங்கம் மயங்க வேண்டாம் மக்களையும் இலவசத்தால் மயக்க வேண்டாம்களவியலும் நிறம்மாறிக் கனிய வேண்டாம் காவல்துறை முன்னேதலை குனிய வேண்டாம்மற்றவரின் மனம்நோகப் பேச வேண்டாம் மறந்தும் பழிச்சொல்லை வீச வேண்டாம்கடந்தாண்டின் கவலைகளில் கரைய வேண்டாம் கசப்பான நினைவுகளில் உறைய வேண்டாம்- வெ.இராமராசன்.