16 February 2016 10:24 pm
தங்கக் குட்டிப் பாடல்கள்- கவிஞர்.ஞாயிறு ராமஸ்வாமிமும்பையில் வாழும் தமிழர்களிடையே நன்கு அறிமுகமுள்ள சிறந்த கவிஞர் ‘ஞாயிறு’ இராமசாமி ஆவார். அரசுத் துறையில் மக்கள் குறை தீர்க்கும் பிரிவில் முதுநிலை மேலாளராக பணிபுரிந்தாலும் கவிதை இயற்றுவதில் நிகரற்று விளங்குபவர். பெயர்த்தியின் வரவால் மனம் மகிழ்ந்து களிப்புடன் கவிதை பல பிறந்துள்ளது. அது தமிழ் குழந்தைகளுக்கு அருமையானதொரு சிறுவர் கவிதை நூல் கிடைத்திட அரிய வாய்ப்பாக அமைந்தது. குழந்தைகளிடம் பழகிடும் வாய்ப்பு நம்மில் பலருக்கு கிடைப்பதில்லை. அப்படியே கிடைக்கப் பெற்றாலும் குழந்தைகளின் ஆழ் மனதின் எண்ணங்களைப் புரிந்து இலகுவாக அவர்களிடம் உரையாடி, பெரிய செய்திகளையெல்லாம் அவர்களுக்கு புரியும்படி, மனதில் பதிய வைக்கும் முயற்சியில் நம்மில், எத்தனை பேருக்கு வெற்றி கிட்டியிருக்கும்? அது வெகு சிலருக்கே அந்ததிறன் அமைந்திருக்கும் இதில் ‘ஞாயிறு’ ராமசாமியும் அடங்குவார். உயர்வைஉணர்த்தும் புத்தகம் -இது மலர்ந்த இடமே நூலகம் பதில்கள் ஒலிக்கும் புத்தகம் -எதி ரொலிக்கும் இடமே நூலகம் இப்படி நூலகத்தின்அருமையை குழந்தைகளுக்கு சொல்கிறார். எங்கும் சிறு தொய்வின்றி கொண்டு செல்லும் கவிஞரின் நடை அற்புதமானது. இந்நூல் குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களும் படித்து மகிழலாம்.வெளியீடு : புவனேஸ்வரி பப்ளிகேசன்ஸ், 3/82, (4.எண் 3/59), கணேஷ்தெரு, பாலையா நகர், மடிப்பாக்கம் கூட்ரோடு, மடிப்பாக்கம், சென்னை- 600 091. (பக்கங்கள் : 152 விலை : 150)