15 March 2014 7:35 am
விழிகள் சுமந்த கனவுகள்- ஓவியக் கவிஞர் ஆ.உமாபதி கவிதை என்பது எல்லாரும் எளிதில் எழுதிவிட முடியாத ஒன்று. கவிதை புனைந்திட தாய்மொழிப் பற்றுதல் வேண்டும்; இயற்கையை ரசிக்கும் தன்மை வேண்டும்; கலை ரசனை வேண்டும்; கற்பனை வளம் வேண்டும்; சிந்திக்கும் திறன் வேண்டும்; மொத்தத்தில் காதல் என்ற களத்தில் இளமைத் துள்ளல் வேண்டும். அப்போதுதான் கவிதை மழை பொழியும். கற்பனைத் தேரில் வீதி உலா வரலாம். ஓவியக் கவிஞர் பதிவு செய்துள்ள நீ என்றைக்கு என் தெருவிற்கு குடி வந்தாயோ, அன்றிலிருந்து தெருவெங்கும் இளைஞர்கள் திருவிழா எனும் வரிகள் மிகவும் மேன்மையான கவிதை வரிகளாக அமைந்துள்ளன. கற்பனையை தனதாக்கி, கவிதைக்கு உயிரோட்டம் தந்து படைத்துள்ள கவிதைகள் என்றும் நம் நெஞ்சத்தில் தேரோட்டமாய் வீற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை. ஓவியங்கள் கவிதைக்கு மெருகூட்டுகின்றன.வெளியீடு:இனிய நந்தவனம் பதிப்பகம்17, பாய்க்காரத் தெரு,உறையூர், திருச்சி – 620 003(பக்கங்கள்: 112 விலை: 50)