வறுமை ஒழிப்பில் ஜகாத்தின் பங்கு - தமிழ் இலெமுரியா

20 August 2013 7:23 pm

– பேராசிரியர் எம்.எஸ்.ஸெய்யிது முஹம்மது மதனி

இந்தியாவில் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வறுமையை ஒழிப்பதற்கு எந்த வித திட்டங்களும் இதுவரை சரியான முறையில் அமல் செய்யப்பட்டு வெற்றி அடையவில்லை. ஏழ்மையும், வறுமையும் நம் நாட்டில் மட்டுமல்ல; அது ஒரு சர்வதேச சிக்கலாக வளர்ந்து வருகிறது. முதலாளித்துவ நாடுகளிலும் சரி, பொதுவுடைமை நாடுகளிலும் சரி, இரண்டும் கலந்த கலப்புப் பொருளாதார நாடுகளிலும் சரி இந்த வறுமை ஒழிந்த பாடில்லை. வறுமையில் வாடுவோரின் நன்மைக்காக செழுமையில் வாழ்கிறவர்கள் மீது ஜகாத் எனும் வறுமை ஒழிப்புத் திட்டத்தை கடமையாக்கியுள்ளது இசுலாமியச் சமயம். வறுமை ஒழிப்புக்கு இசுலாம் கூறும் ஜகாத் திட்டம் சரிவர நடைமுறைப் படுத்தப்பட்டால் நாட்டில் பஞ்சமோ, பட்டினியோ இருக்காது எனும் நோக்கில் இந்நூலைப் படைத்துள்ளார் நூலாசிரியர். இசுலாமிய முறைப்படி வறுமை ஒழிப்பைக் கூறியுள்ள இந்நூலை இசுலாம் சமயத்தவர் மட்டுமின்றி அனைவரும் வாசித்து, ஆராய்ந்து வறுமை இல்லாத தேதத்தை உருவாக்க வழிவகுக்கலாம்.

வெளியீடு :

இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்,
138, பெரம்பூர் நெடுஞ்சாலை,
சென்னை – 600 012.
பக்கங்கள் : 248
விலை: 100

வறுமை ஒழிப்பில் ஜகாத்தின் பங்கு
வறுமை ஒழிப்பில் ஜகாத்தின் பங்கு பக்கங்கள் : 248 விலை: 100

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி