சிற்றிலக்கியங்களில் திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்க மாநாடு - தமிழ் இலெமுரியா

15 November 2013 2:43 am

திருவள்ளுவர் திருக்குறள் நற்பணி மையத்தின் சார்பில் சிற்றிலக்கியங்களில் திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்க மாநாடு" சென்னையில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் பேரா. முனைவர் இலலிதா சுந்தரம் வரவேற்புரையாற்றினார். திருவள்ளுவர் சிலையை தமிழ்ப்பணி ஆசிரியர் வா.மு.சே.திருவள்ளுவரும், திருவள்ளுவர் படத்தை முனைவர் கடவூர் மணிமாறனும் திறந்து வைத்தனர்.  மாநாட்டில் மகளிர் அரங்கம், கவியரங்கம், கருத்தரங்கம் என பல்வேறு நிகழ் முறைகள் இடம் பெற்றன. மாநாடு மலரை மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் கீ.வி.மூர்த்தி, சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி ஆகியோர் வெளியிட்டு கருத்துரையாற்றினர். இரண்டாம் நாள் நிகழ்வில் ஆய்வரங்கம், கருத்தரங்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. கருத்தரங்கைத் தொடங்கி வைத்து பேரூர் அதீனம் தவத்திரு மருதாச்சல அடிகள் உரையாற்றினார். மும்பை தமிழ் இலெமுரியா ஆசிரியர் சு.குமணராசன், கண்ணதாசன் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் சரசுவதி இராமநாதன், குறளறிஞர் கு.மோகனராசு, முனைவர் பீ.ரகமத் பீபி, முனைவர் அறிவுடை நம்பி உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்."

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி