வாழ்க்கை இணை ஏற்பு விழா - தமிழ் இலெமுரியா

16 June 2016 8:21 pm

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் சுயமரியாதைத் திருமணத்தை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ் இலெமுரியா" முதன்மை ஆசிரியர் சு.குமணராசன் – நங்கை இணையர் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டனர். இன்று அதே வழியில் அவர்களின் புதல்வரும் ‘பெரியார் பெருந்தொண்டர்’ சீர்வரிசை சண்முகராசனார் – தவமணி இணையரின் பெயரனுமான இங்கர்சால் -& இரஞ்சினி இணையரின் வாழ்க்கை இணை ஏற்பு விழா மும்பை, பாண்டூப் ஏசியன் மணவிழா அரங்கில் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி இவ்வாழ்க்கை இணை ஏற்பு விழாவிற்கு தலைமை ஏற்று வாழ்க்கை இணை நல ஒப்பந்த உறுதிமொழியுடன் திருமணத்தை நடத்தி வைத்தார். விழாவில் மணமக்களை வாழ்த்தி ஈரோடு, மக்கள் சிந்தனைப் பேரைவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன், எழுத்தாளர் திருமதி நாகலட்சுமி சண்முகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இவ்விழாவில் மகாராட்டிரா சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் இரா.தமிழ்ச் செல்வன், தொழிலதிபர்கள் மாரிமுத்து, அங்கப்பன், பி.பி. முத்து, சிவகுமார், வி.க.செல்வகுமார், அழகன் கருப்பண்ணன், திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன், வெ.சித்தார்த்தன், வேல்ராசு இ.ஆ.ப., சிங்கார வேல் இ.கா.ப., பூனே தமிழ்ச் சங்க நிருவாகிகள் ஓம் பிரகாசு, நித்தின் பிரகாசு, பம்பாய் திருவள்ளுவர் மன்ற செயலாளர் வி.தேவதாசன், மும்பை பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அ.இரவிச்சந்திரன், மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன், கவிஞர் புதிய மாதவி, டாக்டர் அமுதகுமார், பல்வேறு தமிழ்ச்சங்க நிருவாகிகள், தமிழ் அன்பர்கள், சமுக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்."

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி