5 June 2013 3:43 pm
விழித்தெழு இளைஞர் இயக்கம் சார்பாக, 5ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு மற்றும் சமத்துவ பொங்கல் விழா சனவரி 14, 2013 அன்று காலை 6 மணி அளவில் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் எழுத்துக்கள் 247லும், ஒரு பானைக்கு ஒரு எழுத்து என்கிற அகர வரிசையில் பொறிக்கப்பட்டு, தமிழர்கள் இடையே நிலவும் சாதி, மத பிரிவினைக்குத் தடை போடும் நல் எண்ணத்துடன் நாம் எல்லாரும் ஓரினம், தமிழ் பேசும் தமிழினம் என்ற ஒற்றுமையுணர்வோடு நடத்தப்பட்டது.
இதில் “தமிழ் இலெமுரியா” முதன்மை ஆசிரியர் சு.குமணராசன், மும்பை தமிழின இரயில் பயணிகள் நலச்சங்கத் தலைவர் அண்ணாமலை, மும்பை புறநகர் தி.மு.க செயலாளர் அலிசேக் மீரான், தே.வா.காங்கிரஸ் தலைவர் ஆல்வின்தாஸ், கிங்மேக்கர் காமராஜ் தமிழ் டிரஸ்ட் தலைவர் கே.பொன்ராஜ், மும்பை அருந்ததியர்கள் சங்கத் தலைவர் எஸ்.நடேசன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி இவ்விழாவை தொடங்கி வைக்க, விழுத்தெழு இளைஞர் இயக்கத் தலைவர் உ.பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். விழித்தெழு இயக்க அமைப்பாளர் இரா.தங்க பாண்டியன் வரவேற்புரை வழங்க பகுத்தறிவாளர்கள் கழக அமைப்பாளர் அ.இரவிச்சந்திரன் தொகுப்புரை வழங்கினார்.
மும்பை திராவிடக் கழக தலைவர் பெ.கணேசன் வாழ்த்துரை வழங்கினார். மேலும் திருமதி அமலா ஸ்டான்லி, திருமதி புதிய மாதவி, திரு ஏ.பி.சுரேஷ், திரு எஸ்.ஏ.சுந்தர், திரு வே.உத்தமன், திரு சேசுராசு, திரு கணேஷ் குமார், திரு செல்வக்குமார், திரு ந.இராதாகிருட்டிணன், திரு சி.முருகசீலன், திரு பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவின் நிறைவாக புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தியாளர் பா.மகிழ்நன் மற்றும் விழித்தெழு இளைஞர் இயக்க பொருளாளர் நெல்லை து.சிரிதர் ஆகியோர் நன்றியுரைக் வழங்கினர்.