பிரபாகரன் தமிழ் எழுச்சியின் வடிவம் நூல் வெளியீட்டு விழா - தமிழ் இலெமுரியா

22 May 2013 12:52 pm

பழ.நெடுமாறன் எழுதியுள்ள “பிரபாகரன் தமிழ் எழுச்சியின் வடிவம்” என்ற நூல் வெளியீட்டு விழா மும்பை மலாடு பகுதியில் நடைபெற்றது. உலகத் தமிழர் பேரமைப்பு மும்பை கிளை சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் நூலாசிரியர் பழ.நெடுமாறன், ஈழத்து பெருங்கவிஞர் பாவலர் காசி. ஆனந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர். மு.மாரியப்பன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் இறை.ச.இராசேந்திரன் வரவேற்புரையும், முத்தமிழ் மணி தொடக்க உரையும், உ.ஞான சேகரன் நூல் ஆய்வுரையும் ஆற்றினர். கவிஞர் காசி.ஆனந்தன் நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார்.

முதல் மூன்று படிகளை நா. முருகேசன், சு.குமணராசன், சி.நித்தியானந்தன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இவ்விழாவில் திருவள்ளுவர் மன்ற செயலாளர் வி.தேவதாசன், மும்பை மாநகராட்சி மன்ற உறுப்பினர் கேப்டன். ஆர்.தமிழ்ச் செல்வன், தமிழ் காப்போம் பால் வண்ணன், விழித்தெழு இயக்கம் து.சிரிதர், காமராஜ் நினைவுப் பள்ளித் தலைவர் அ.இராமராஜ், ஆதிதிராவிடர் சங்க தலைவர் கே.வி.அசோக் குமார், முத்தமிழ் மன்றம் அ.கணேசன், ஜெரிமெரித் தமிழ்ச் சங்கம் எஸ்.வின்சென்ட் பால், கோ.சீனிவாசகம், ஆதித் தமிழர் பேரவை அண்ணாதுரை, நாம் தமிழர் கட்சி ம.கென்னடி, அந்தேரி தமிழ்ச் சங்கம் நா.காமராஜ், பூலான்குளம் ஜெ.சுகுமாறன், ராசா உடையார் உள்ளிட்ட ஏராளமான தமிழ் அமைப்பின் பிரதிநிதிகளும், ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். இறுதியில் பழ.நெடுமாறன் ஏற்புரையாற்றினார். நிகழ்ச்சியை ப.மிக்கேல் அந்தோணி தொகுத்து வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை மும்பை உலகத் தமிழர் பேரமைப்பு ஒருங்கிணைப்புகளை அ.நாடோடித் தமிழன் சிறப்பாக செய்திருந்தார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் முள்ளிவாய்க்கால் சோகத்திற்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி