16 September 2015 11:48 am
இலெமுரியா அறக்கட்டளையின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் இராமானுஜம் புதூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. இராமானுஜம் புதூர் பொது மக்களுடன் இணைந்து நடைபெற்ற இவ்விழாவில் பள்ளியில் நன்கு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் தமிழ் மொழிப் பாடத்தில் முதல் நிலை மதிப்பெண் பெற்ற மாணவர்களும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. ‘இலெமுரியா அறக்கட்டளை’ நிறுவனரும் ‘தமிழ் இலெமுரியா’ முதன்மை ஆசிரியர் சு.குமணராசன் திருமதி நங்கை குமணராசன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுபானந்த பாரதி, சிவராஜ் லின்டெட், முத்துக்குட்டி, செங்கான், பால சுப்பிரமணியன், தமிழ்ச் செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி வசந்தி நாகராசன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.