16 August 2014 10:53 am
திலகவதியார் திருவருள் ஆதீனத்தில் இந்திய திருநாட்டின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலெட்சுமி (ரெட்டி) அம்மையாரின் 129 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. திலகவதியார் திருவருள் ஆதீன வளாகத்திலுள்ள அம்மையாரின் முழு திருவுருவச் சிலைக்கு திலகவதியார் திருவருள் ஆதீனம் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாவட்ட வர்த்தக கழகத் தலைவர் இராம.வைரவன், வைரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் பேரா.இரகுபதி சுப்பிரமணியன், டீம் மருத்துவமனை டாக்டர் கே.எச்.சலீம், அரசு அருங்காட்சியக மேனாள் உதவி இயக்குநர் டாக்டர் ஜெ.இராஜாமுகமது, மாவட்ட மேனாள் வருவாய் அலுவலர் இராஜகோபால், ஆலங்குடி வர்த்தகக் கழக தலைவர் மெ.அ.தனபால் (செட்டியார்), மாவட்ட மேனாள் முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.சிவாஜி, ந.புண்ணிய மூர்த்தி மற்றும் திரளான பெண்கள் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தனர். நிறைவாக, இந்நிகழ்ச்சியில் நாட்டின் முதல் பெண் மருத்துவராக விளங்கிய டாக்டர் முத்துலெட்சுமி அம்மையாரை போற்றிடும் வகையில், அவர் பிறந்த புதுக்கோட்டையில் மணி மண்டபம் கட்டப்பட வேண்டும் எனவும், பெண்ணியத்திற்கு மட்டுமல்லாது, குழந்தைகளின் நலனிலும் வாழ்விலும் அக்கறை காட்டிய பெருமாட்டியின் சமூக அக்கறையை போற்றும் வகையில் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதினை மத்திய அரசு வழங்கிட வேண்டும் எனவும், புதுக்கோட்டை மக்களின் நீண்ட நாள் கோரிகையான மருத்துவக் கல்லூரியினை டாக்டர் அம்மையாரிருடைய திருப்பெயரில் துவக்கிட வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.