15 November 2013 2:40 am
திருநெல்வேலி கவிஞர் குமார சுப்பிரமணியம் நிறுவியுள்ள நெல்லை குமார கபிலன் அறக்கட்டளை" சார்பில் 2013 ஆம் ஆண்டு "காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ?" எனும் தலைப்பில் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியின் பரிசளிப்பு விழா 06.10.2013 இல் நெல்லை ம.தி.தா.இந்து மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. பரிசளிப்பு விழாவிற்கு மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எஸ்.ஏ.சிவப்பிரகாசம் தலைமை வகித்தார். ச.நடராசன் வரற்புரையாற்ற, அறக்கட்டளை நிறுவனர் கவிஞர் குமார.சுப்பிரமணியம் அறக்கட்டளை நோக்கம் குறித்து எடுத்துரைத்தார். ம.தி.தா.இந்து மேல்நிலைப் பள்ளி கல்விச் சங்க பொருளாளர் தளவாய் டி.இராமசாமி முன்னிலையில் கவிதைப் போட்டியில் முதல்பரிசு பெற்ற திருக்குறள் புலவர் நாவை சிவம், இரண்டாம் பரிசு பெற்ற நா.தமிழ்ச்சுதா, மூன்றாம் பரிசு பெற்ற நா.சந்தணக்குமார் ஆகியோருக்கு முறையே ரூ 2000, ரூ 1000, ரூ 500 ரொக்கப் பரிசினை டி.எஸ்.ஏ.சிவப்பிரகாசம் வழங்கினார். நிகழ்ச்சியில் "தலைவர் கலைஞரின் ஆளுமையில்" எனும் தலைப்பில் முனைவர் கடவூர் மணிமாறன் தலைமையில் பாட்டரங்கம் நடைபெற்றது. பாவலர்கள் திருக்குறள் புலவர் நாவை சிவம், கருவை மு, குழந்தை, தண்முகநம்பி, பொன் வேலுமயில், நா.செயபாலன் ஆகியோர் கவிப்பாடினர். இறுதியில் சு.புன்னைச் செழியன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க துணைச் செயலாளர் வழக்கறிஞர் மு.முத்துராமலிங்கம், பேராசிரியர் மு.மாணிக்கம், கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி, அறக்கட்டளை உறுப்பினர்கள் கற்பகம், சிவகாமி கபிலன், நச்சினார்க்கினியன், திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்."