வாசகர் மடல்கள் - தமிழ் இலெமுரியா

17 March 2015 8:21 pm

இன்றும் பொருந்தி நிற்கின்றனதமிழை ஒரு மொழி என்றெண்ணாமல் அது ஒரு வாழ்வியல் பாடம் எனக் கொண்டு கற்க முற்படுவோமானால் தமிழினம் சிறந்து விளங்கும் என்பதை சிந்தையில் ஏற்றி செப்பனிடப் பணித்துள்ள ஆசானுரை மிக அருமை. இலங்கையில் நிகழும் இனம், மொழி வெறிக் கொடுமைகள் குறித்து செந்தமிழ்ச் செல்வி இதழ் 1958 இல் வழங்கியிருந்த செய்திகள் இன்றும் பொருந்தி நிற்கின்றன. புதிய அரசால் விடிவேற்பட்டால் நல்லது! நமக்குப் பெரிய பலமாயிருக்கும் உழவுத் தொழிலை மேம்படுத்தாமல் உலகமயமாக்கலால் ஏதும் நன்மை ஏற்படாது. ஏழையர் மேலும் ஏழையாவதுடன் செல்வந்தர் மேலும் செல்வத்தில் கொழிப்பதும் உறுதி என்னும் குமுகவியல் கட்டுரையில் பல உண்மைகள் பளிச்சிட்டன. சிதம்பரநாதனின் திருக்குறளில் இடம் பெற்றுள்ள மயிர் பற்றிய செய்தியில் மறுபரிசீலனை வேண்டுமென்ற விழைவு ஆய்வுக்குக்குரியதே! இலெமுரியாப் பொங்கல் மலரில் கவிதைகளும் கட்டுரைகளும் வழிந்தோடிக் கற்கண்டுப் பொங்கலாய் இனித்தன.- புலவர் ந.ஞானசேகரன், திருலோக்கி- 609 804பாராட்டுக்கள் விடுதலும் அயல் கட்டத்தில் நீர் தேக்கலும் விளை பயிர் காத்தலும் உழவினொடு நன்று பயக்கும் என்று குறளியம் யாக்கை நெறினார். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உரைத்திருக்கும் கருத்தியல் இன்றும் என்றும் பொருந்தும்!தொல்லியர் தமிழியம் நூல்கள் அழித்தல் பட்டு எஞ்சியவையும் மறைத்தல்பட்டு இருக்கும் காலம் இக்காலம். தமிழ் காப்பதாய் ஏய்த்து நயமாய் நடித்தோர் பல்லோரால் தமிழியம் கல்வியும் அற்றுப் போகுமாறு தமிழ்நாட்டில் ஆக்கப்பட்டுவிட்டது. சுறவம் இதழ் தலையங்கம் கருத்தியல் நோக்கமும் அவ்வாறாயிதே! பாராட்டுகள்-அ.ம.பொ. தமிழ் அறிவன்.மனதுக்கு நிறைவு பொங்கல் சிறப்பிதழில் கவிஞர் பூ.அ.இரவீந்திரன் கவிதையில் உழவனை உயிர் காக்கும் இறைவன் என்றால் மிகையாகாது எனும் வரிகளில் உழவனின் மேன்மையுடன் உழுத மாடுகளின் அர்பணிப்பும் பளிச்சிட்டது. அறிஞர் டால்ஸ்டாய் உலகின் பல நூல்களை கற்று தேர்ந்தவராக இருந்தும் தாம் எழுதும் மடல்களில் தவறாது திருக்குறளிலிருந்து எடுத்துக் காட்டுபவையாக இருந்ததையும் தமிழர் என பேர் படைத்து வாழும் தமிழ் மக்கள் தம்முடைய மொழியின் தனிச் சிறப்பை இன்றளவும் உணர மறுக்கும் போக்கு வேதனை தரும் ஒன்றாகும் என உணர்த்திய தலையங்கம் தமிழர்களின் தமிழ் பற்றை படம் பிடித்துக் காட்டியது.  மனதுக்கு நிறைவை தரும் எஸ்.என்.சாகுவின் யோகாக் கலை கட்டுரை. கண்களை ஈரமாக்கியது ஜீவா, முத்துக்குமார் வரலாறு. மதுவிலக்கு கட்டுரையில் மக்களரசு பதநீர் இறக்கிடலாம் என்று உரிமம் கொடுத்ததால்தான் பதநீர் கள்ளாக மாறியது எனக் குறைப்பட்டுக் கொண்ட புலேந்திரன் பனைத் தொழிலாளர்களின் நலனை மறந்தது ஏனோ? மாணவப் பருவத்தில் தமிழ் ஆசிரியர் பாடம் நடத்தியதை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்தது இலக்கியத்தில் இரு மடல்கள்" கட்டுரை. திருக்குறளுக்கு பெ.சிதம்பரநாதனின் புதுமை உரைக்கு வலிமை சேர்க்க ஆக்ஸ்போர்ட் அகராதியை மேற்கோள் காட்டியும் குறளை திருத்த வேண்டும் எனும் வேண்டுகோளையும் தமிழறிஞர்கள் ஏற்று பரிந்துரைக்க வேண்டும்.- அண்ணாதுரை கதிர்வேல்,  அம்பர்நாத் – 400 521பாதுகாக்க வேண்டிய இதழ் மொழி, மக்கள், அரசு கட்டுரையில் தமிழ் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் ஓர் அரசு வேண்டும் எனவும் அதற்காக ஐரோப்பிய கூட்டமைப்பு போன்று தமிழர் கூட்டமைப்பு ஏற்படுத்திடவும் அதில் அனைத்துலக தமிழர் பிரதிநிதிகள் அமைச்சராக்கி தமிழர் நிலை ஓங்கிட பாடுபட வேண்டும் என அருமையான யோசனை வழங்கியுள்ளார் சங்கீதா கண்ணன். இலக்கிய நயத்தோடு அருமையான நடையில் எழுதப்பட்டுள்ளது சிறுகதை. இரத்தமாகிறது காலை தேநீர் கவிதை இன்றைய ஊடகங்களில் வரும் செய்திதாள் செய்தியை வைத்து எழுதியிருந்தது அருமை. பொங்கல் இதழ் பாதுகாக்க வேண்டிய உன்னத இதழ்.  - சுகந்தி,  புனே- 411 002"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி