பெரியாரியல் குறித்த மும்பை மாணவர்கள் கருத்துரை - தமிழ் இலெமுரியா

11 January 2015 5:52 pm

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 82 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பாக மாதுங்கா மைசூர் அசோசியேசன் குளிர் அரங்கத்தில் பெரியாரியல் குறித்த மாணவர்கள் கருத்துரை நிகழ்வு நெல்லை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.காசி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அ.இரவிசந்திரன் வரவேற்புரையாற்ற, ம. தயாளன் தொடக்கவுரை ஆற்றினார். சு. குமணராசன், பொ.அப்பாதுரை, பெ.கணேசன், சமீரா மீரான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பெரியாரியல் கருத்துரை என்ற தலைப்பில் தாராவி கம்பன் உயர்நிலை பள்ளியைச் சார்ந்த காயத்திரி, இரமணா தேவி, அனுஷ்யா மேரி, வெங்கடேஷ் ஆகிய மாணவ மாணவிகள் பங்கேற்று கருத்துரை வழங்கினார்கள். மாணவர்களுக்கு நினைவுப் பரிசு மற்றும் நிதியினை சிவநல்லசேகரன், கா.வ.அசோக் குமார், எஸ்.இரவீந்திரன், இல.தேவதாசன் ஆகியோர் வழங்கிச் சிறப்பித்தனர். நிகழ்ச்சிகளை பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் எம்.சசிகுமார் தொகுத்து வழங்கினார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி