பொங்கல் விழா - தமிழ் இலெமுரியா

17 February 2015 6:17 pm

மும்பை, அணுசக்தி நகர் கலை மன்றத்தின் சார்பாக பொங்கல் விழா ஆர். சண்முகம் தலைமையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நல்லாசிரியர் விருது பெற்ற கு.ஆறுமுகப் பெருமாளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஙருமதி இராணி முத்துராஜ் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. கலை மன்றத்தின் குழந்தைகள் அனைவரும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். கலைமன்ற தலைவர் கனகசபை வரவேற்புரையாற்ற, செயலாளர் பு.தேவராசன் கலை மன்ற செயல்பாடு பற்றி உரையாற்றினார். கலை மன்ற உறுப்பினர்கள் ஆனந்தன், செல்வம், தர்மலிங்கம், மூர்த்தி, சேது, தங்கராஜ், சுப்பிரமணியன், சண்முகம், சதிஸ்குமார் உறுதுணையோடு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. துணைப் பொருளாளர் மூர்த்தி நன்றியுரையாற்றினார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி