14 April 2014 8:17 am
மராட்டிய மாநிலம் தமிழ் மாணவர் மன்றம் சார்பாக சந்திப்போம் சிந்திப்போம்! நிகழ்ச்சி ஆசிரியர் இர.இராசாமணியின் தலைமையில் மும்பைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எல்.கே. வாக்ஜி நகர் மன்ற தமிழ் உயர்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் எல்.கே.வாக்ஜி நகர் மன்ற தமிழ் உயர்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பாக அக்டோபர் 2014 ஆம் ஆண்டு சண்முகானந்தா கலையரங்கில் தமிழ் மாணவர் மன்ற தமிழ் மாநாடு நடத்துவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. மேற்படி மாநாட்டிற்கு முன்னாள் மாணவரும் தொழிலதிபருமான பூ.மாரிமுத்து தனது சார்பாக ரூ.5,00,000 மாநாட்டு நிதி தருவதாக அறிவித்துள்ளார். நிகழ்ச்சியில் கேப்டன் தமிழ் செல்வன், சு.குமணராசன், கே.வி.அசோக்குமார், இராசா உடையார், அ.கணேசன், மா.கருண், ஏ.பி.சுரேஷ், முகைதீன் பிச்சை, முகமதலி ஜின்னா, என்.இரவீந்திரன், கலைஞர் டி.ஏ.வான்மதி, வி.தேவதாசன், செ.அப்பாதுரை, கே.சாந்தாராம், மா.கதிரவன், பி.எம்.ஜெயா ஆசிர், எஸ்.ஆறுமுகம் ஆகிய பல்வேறு தமிழ் ஆர்வலர்களும், முன்னாள் மாணவர்களான அ.கணேசன், பூ.மாரிமுத்து, அ.ரவிச்சந்திரன், இராதா கிருஷ்ணன், ஆ.சிகாமணி, திருமதி க.சுசிலா, டாக்டர் சுப்ரமணியன், தேவராசன், தண்டாபாணி, மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.