அரைக்குட ஆரவாரங்கள்! - தமிழ் இலெமுரியா

16 February 2016 10:17 pm

கல்வியேதும் கற்காத கயவர் கூட்டம்கல்லூரி  பள்ளியெனக் கடைவி ரித்துக் கல்வியினை விற்கின்ற அவலம் இந்தக்காசினியில் இங்கன்றி வேறெங் குண்டு?செல்வத்தைக் குவிப்பதற்காய்ச் சிந்தை தன்னைச்சீரழிக்கும் செயலுக்குத் துணையாய் நின்றுஅல்வழியில் மதுவிற்று ஆளு கின்றஅரசாட்சி அரைக்குடத்தின் ஆர வாரம்!சவக்குழியாய்ச் சாலைகள், சாக்க டைகள்;சந்தையின் நெரிசலெனக் கட்ட டங்கள்;கவர்தலிலே நீர்நிலைகள் எல்லா மிங்கேகாசாகும் பேராசைக் கையூட் டாட்சி;சுவரொட்டி பெருகிட்ட சுற்றுச் சூழல்;சூழ்சுவாசக் காற்றெல்லாம் சுரண்டல், ஊழல்;அவவாழ்வு வாழ்கின்ற அடிமைக் கூட்டம்;அரசாளும் அரைக்குடங்கள் ஆட்டம், பாட்டம்!ஏருழவர் இல்லத்துள் இருளின் ஆட்சி;எத்தருக்கே யாவுமெனில் எங்கே மீட்சி?வாருகின்ற வரிப்பணத்தைச் சுருட்டி ஏழைவயிற்றுனிலே அடிப்பதுவோ? வறுமைக் கோட்டை வேருடனே நீக்கியதாய் மாயம் காட்டும்வித்தையிலே மயங்குவதோ? விழித்தெ ழுந்து சீருடைய நிறைகுடங்கள் கண்டெ டுப்போம்;சிதறட்டும் அரைக்குடங்கள் ஆர வாரம்! –  கே.பி.பத்மநாபன், கோவை

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி