14 October 2013 9:42 am
தேர்தல் முறையில் தில்லும் முல்லுசெல்வர்க் கேசீட்டு கிடைக்கும்கட்சித் தலைவர் கணித்து நோக்கிகாசுடை யார்க்கே கட்டாயம் சீட்டுசெப்புக் குடங்குகள் சேலை வேட்டைஅப்போ தங்கே அளிப்பர் எளியோர்க்குஒப்போலை இடுவர் ஒன்றும் அறியார்எப்போதும் ஏமாறும் ஏழை இவர்கள்இடைகடை மக்கள் இல்லமே இல்லார்நடைவழி இல்லம் நடத்துவோர் தாமும்வளமனை வாழ்வோர் வருவதே இல்லைநடைமுறை இதுவே நம்முடை நாட்டில்மக்கள் அவையின் மாண்புடை உறுப்பினர்தக்கார் தானா சான்றுகள் இல்லைவெக்க கேடாம் வேதனை அய்யகோகுக்கலோ இவர்கள் கையூட்டு பேர்வழிமக்கள் பணத்தை மாந்தும் அமைச்சர்மிக்க பலராம் ஒருசிலர் நல்லவர்கக்கனை போன்றோர் இக்கால் இல்லைதக்கார் யாரோ சான்று தருகதேர்தல் வருவதால் செந்தமிழ் நாட்டில்யார்தாம் வெல்வரோ; எம்மொழி யாரோநேர்மை இல்லார் நிரம்ப பணமுடையோர்தேர்வில் வெல்வர் தெளிவாம் இங்கே;ஆய்வு செய்கஅறிவுடை யோரே!- புலவர் இரா.பே.பெருமாள், மும்பை