சமுதாய வீதி - தமிழ் இலெமுரியா

15 March 2014 7:10 am

எல்லார்க்கும் பொதுவான உணவுண்டு எப்போதும் போலுறங்கி எழுவதுண்டு;எல்லார்க்கும் பொதுவான அன்புடனே எல்லாமும் எளிதாகப் பெறலாகும்!எல்லாரும் எல்லாமும் பெறவேண்டி எத்தனைபேர் இல்லாத இறைவேண்டிஎல்லார்க்கும் இல்லாத பொருள்வேண்டி இன்புற்று இருந்திடவே நினைந்திட்டார்?அவனவன் வேலைகளைச் செய்யாமல் அடுத்தவனைப் பேசிநாள் கழித்திட்டுஅவனவன் காரியத்தில் கவனமின்றி அடுத்தவனைக் குறைகூறி அழுந்திடுவான்!அவனவன் போக்கினிலே சந்திக்கும் அன்றாடச் சிக்கலையும் தீர்க்காமல்அவனவன் முதுகுப்புறம் தெரியாதான் அடுத்தவனை நையாண்டி செய்கின்றானே!கடமையிலே கால்கடுக்க உழைப்பானை கடைத்தெருவில் பொதுமக்களாய் உட்கார்ந்துகடமையிலே சிந்தனையை ஒழுங்காக கடைபிடிக்க முடியாதவன் கபோதியே!கடமையினை மனமூன்றிப் புரிகின்ற கடுந்தவசி யானகர்ம ய்இகிகள்கடமையினைப் பக்குவமாய்ப் பகிர்ந்திடுதல் கட்டாயம் தேவையெனக் கழன்றிட்டாரே! – தமிழ்அன்பன், பட்டுக்கோட்டை.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி